அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

கூடுதல் வரிவிதிப்பால் விலை உயர்வு: சிகரட் முதல் மொபைல் வரை இனி கையை சுடும்!

தமிழக அரசு பல பொருட்களின் மீதான வரியை அதிகரித்ததை தொடர்ந்து, பீடி, சிகரட், சமையல் எண்ணெய் மற்றும் மொபைல் போன்றவை விலை உயர தயாராகி விட்டன. சிகரட்டை பொறுத்தவரை கேட்கவே வேண்டாம். அறிவிப்பு வருகிறது என்றாலே, ஒன்று சிகரட்கள் எல்லாம் பதுக்கப்பட்டு விடும்; இல்லாவிட்டால், பகிரங்கமாக விலையை ஏற்றி விடுவார்கள். இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சில பிராண்ட் சிகரட்கள் கிடைக்கவில்லை.தமிழக அரசு, தன் இலவச திட்டங்களுக்காகவும், நிதி நெருக்கடியை போக்கிக்கொள்ளவும், நேற்றுமுன்தினம் இரவில் திடீரென வரி உயர்வை அறிவித்தது. புதிய அரசு பதவியேற்றதும் முழு பட்ஜெட் போட வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த மாதம் அதற்காக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த நிலையில், திடீரென பல பொருட்களின் விலை அதிகரிக்க வகை செய்யும் வரி அதிகரிப்பு, பலரையும் நேற்று காலையிலேயே பதற வைத்தது.சமையல் எண்ணெய் விலை!வரி உயர்வு எதிரொலியாக, சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ரூ. 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ. 5 கோடியாக குறைத்து அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூ. 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் விலை ரூ. 2லிருந்து ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மொத்த மார்க்கெட்டில் பாமாயில் (பாக்கெட் 900 மி.லி.) ரூ. 54க்கு விற்றது ரூ. 56க்கு விற்பனை செய்யப்பட்டது. சன் பிளவர் ஆயில் ரூ. 76லிருந்து ரூ. 78, கடலை எண்ணெய் ரீபைண்ட் ரூ. 95லிருந்து 97, தேங்காய் எண்ணெய் ரூ. 130லிருந்து ரூ. 133, தேங்காய் எண்ணெய் (2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ. 103, அக்மார்க் நல்லெண்ணெய் ஸி130லிருந்து ரூ. 133, சாதா நல்லெண்ணெய் ரூ. 80லிருந்து ரூ. 85, வனஸ்பதி ரூ. 68லிருந்து ரூ. 70க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எடை போட்டு விற்பனை செய்யப்படும் எண்ணெய் வகைகள் ரூ. 5 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று முன்தினம் பாமாயில்(1 கிலோ) ரூ. 58 என்றிருந்தது ரூ. 60 ஆனது. சன் பிளவர் ஆயில் ரூ. 73லிருந்து ரூ. 75, கடலை எண்ணெய் ரூ. 90லிருந்து ரூ. 93, அக்மார்க் நல்லெண்ணெய் ரூ. 125லிருந்து ரூ. 130, சாதா நல்லெண்ணெய் ரூ. 85லிருந்து ரூ. 90, தேங்காய் எண்ணெய்(2ம் ரகம்) ரூ. 100லிருந்து ரூ. 105, டால்டா ரூ.68லிருந்து ரூ. 70க்கும் விற்கப்பட்டது.துணிமணிகள் விலை உயர்ந்ததுதமிழக அரசு தற்போது ஜவுளித்துறையில் 5% வரிவிதிப்பு அறிவித்துள்ளது. இதனால் ரெடிமேட் உள்ளிட்ட ஜவுளிகளின் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜவுளி வியாபரிகள் கூறுகையில், ‘’இது எங்களை கவலையடைச் செய்துள்ளது. கருவிகள், நூல் விலை உள்ளிட்டவைகளால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். இதனால் ஜவுளி கடைகளில் ஆடைகளின் விலையும் கணிசமாக உயரும்(ஒரு சதவீதம்). விற்பனையும் கணிசமாக குறையும். வாடிக்கையாளர்களும் சிரமப்படுவார்கள். இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கைத்தறித் தொழில் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்’’ என்று கூறினர்.விற்பனை நிறுத்தம்மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில், ‘‘புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் 12.5 சதவீத வாட் வரியின் படி எம்ஆர்பி ரேட் அச்சடிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே நாளில் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஸ்டாக் பொருட்களை மட்டும் அதே விலையில் விற்பனை செய்ய அரசுடன் இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த காரணத்தால் தமிழகத்தில் விற்பனையை நிறுத்தியுள்ளது’’ என்றார்.மொபைல் ரூ. 500 கூடுது
தமிழக அரசு செல்போனுக்கு 4 சதவீதமாக இருந்த வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியதால் செல்போன் விலை ரூ. 500 வரையும், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் விலை ரூ. 200 வரையும் உயருகிறது.  நேற்று முன்தினம் வரை ரூ. 5ஆயிரம் வரை விற்பனையாகி வந்த செல்போன் ஒன்றில் விலை 14.5 சதவீதம் வாட் வரி காரணமாக நேற்று ரூ. 5,550க்கு விற்கப்பட்டது. ரூ. 2000க்கு விற்கப்பட்ட செல்போன் நேற்று  ரூ. 2,210 ஆனது. இதேபோன்று கம்ப்யூட்டர் விலையும் ரூ. 1000க்கும் மேல் உயருகிறது.டி.வி, எல்சிடி டி.வி ஆகிய வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 4 சதவீதமான இருந்த வாட் வரி நேற்று முதல் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நேற்று முன்தினம் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிரிட்ஜ் நேற்று ரூ. 20,200 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 20 வாட் வரி அதிகரிக்கும். அதேபோன்று மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஸ்டவ், அயன்பாக்ஸ், குக்கர், ஸ்டெப்லைசர் ஆகிய பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயாந்துள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்புஅசையா சொத்துக்களை பதிவு செய்ய தற்போது ஒரு லட்சத்துக்கு ரூ. 9 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது 8 சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவதற்கும், 1 சதவீதம் அரசுக்கு கட்டணமாகவும் செலுத்தப்பட்டு வந்தது. அதன்படி 10 லட்சம் ரூபாய்க்கு காலிமனை வாங்கியவர்கள், அந்த இடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை பத்திர பதிவு கட்டணமாக செலுத்தி வந்தனர். தற்போது, இந்த கட்டணம் உயரும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரியை 1% கூட்டினாலே ரூ. 10 லட்சத்திற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரை பதிவு கட்டணம் அதிகரிக்கும். எத்தனை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவிக்கவில்லை.பகோடா விலை ஏறுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதையும், சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு ஓட்டல் நிர்வாகத்தினர் உணவு பொருட்கள் விலையை சற்று அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.  ஓட்டல் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதற்கான முடிவு அறிவிக்கப்படும்‘ என்று ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அனேகமாக வடை, பஜ்ஜி, சம்சா, பக்கோடா போன்றவற்றின் விலை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

No comments: