01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.
உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.
அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.
வஹ்ஹாபியிஸம் என்ற தனிக் கொள்கை ஏதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை பெறச் செய்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள். அதன் பின்னர் தூய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு வஹ்ஹாபியிஸம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. எனவே தூய இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற்ற சவூதி மன்னரின் அடக்கம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.
இப்போது இந்தியாவுக்கு வருவோம்
12.04.2006 அன்று கன்னட நடிகர் ராஜ்குமார் என்பவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் அமளி துமளியானது. கொளுத்தப் பட்டது அதிகமில்லை. வெறும் 100 பஸ்கள் தான். பறி போன உயிர்கள் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேர் தான். சென்னையிருந்து செல்கின்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கலவரத் தீ மூண்டது.
இந்தியாவைக் கலக்கிய கன்னட நடிகர் ராஜ்குமாரின் மரணத்தையும், உலகையே கலக்கிய சவூதி மன்னர் ஃபஹதின் மரணத்தையும் ஒப்பீடு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை தன் பயணத்தைத் தொடர்கின்றது.
ராஜ்குமார் மட்டுமல்ல! எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என யாராக இருந்தாலும் இந்தியாவின் நிலை இது தான். தலைவர்களின் மரணத்தையொட்டி நடக்கும் கொடுமைகளை, கோரத் தாண்டவத்தை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்.
பாதி வழியில் பரிதவிக்கும் பயணிகள்
யாரடா அந்தக் கசுமாலம்? கடையைத் திறந்து வைத்திருக்கிறான். தலைவர் இறந்துட்டாரு! என்னடா துணிச்சல்? என்று கும்பல் தலைவன் சொல் முடிக்கவில்லை. அதற்குள் கடையில் உள்ள சோடா பாட்டில்கள் சாலையில் நாலா பக்கங்களிலும் தெறித்து சிதறின. மூட்டையில் உள்ள மைதா மாவு கருஞ்சாலையை வெண் சாலையாக ஆக்கியது. சுருட்டியவர்கள் சுருட்டிக் கொண்டனர்.
இபல இலட்சக் கணக்கில் செலவு செய்து பளிங்கு போன்று போடப்பட்டிருந்த கண்ணாடிகளை, இறந்து போன தங்கள் தலைவரின் பெயர் சொல்லும் விதத்தில் தொண்டர்கள் சுக்கு நூறாக்கினர். இட் விற்க வந்த ஒரு பாட்டாளி இட், சட்னி, சாம்பார் சகிதத்தை சாலைக்குப் படைத்து விட்டுப் போனான். அன்று அவனது பிழைப்பில் மண் விழுந்து விட்டது.
இவ்வாறு வானளாவ நின்ற வணிக வளாகங்கள் முதல் சாதாரண மளிகைக் கடைகள் வரை அனைத்து வணிகத் தலங்களும் பெருத்த சேதத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி உடனே கதவுகள் இழுத்து மூடப்பட்டன. மின்னல் வேகத்தில் பல கோடி சொத்துக்கள் பாழாயின. கொஞ்ச நேரத்தில் கடைத் தெருக்கள் வெறிச்சோடிப் போய் மறைந்து போன தலைவருக்காக மவுன விரதம் பூண்டன.
சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் காட்டுப் பாதைகளில் நிறுத்தப்பட்டன. அதனுள் மறுநாள் தலைப் பிரசவத்திற்காகத் தாயகம் செல்ல விரைந்த ஒரு பெண்ணின் சோக முனகல், பிரசவ வ, துடிப்பு சக பயணிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. நெஞ்சு வக்கிறது என்று துடிக்கும் இன்னொரு பயணியின் கதறல், அலறல் அங்கிருந்த பயணிகளின் காதைத் துளைத்தது.
இலட்சக் கணக்கில் செலவழித்து விசாவைப் பெற்று மறுநாள் காலை விமானத்தைப் பிடிப்பதற்காகத் தலைநகர் நோக்கிப் புறப்படுகின்றான். அந்த ரெயிலும் நடுக் காட்டில் தலைவர் மரணத்திற்காக நின்று வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தது.
கொண்டு வந்த உணவு, குடிநீர் தீர்ந்து போய் கூட்டமாக வந்த பயணிகள் கும்பி எரிந்தனர். குழந்தைகள் கூப்பாடு போட்டு அழுதனர். ஆம்! தலைவரின் மரணத்திற்காக!
ரெயில்களின் கதி இதுவென்றால் பேருந்துகளின் கதி என்ன? பல பேருந்துகள் தலைவரின் மரணத்திற்கு சிம்பாக்காக இரங்கல் தெரிவித்து, டிப்போவை நோக்கி, கண்ணாடி இல்லாமல் அழுது கொண்டே ஓடின. ஆம்! காரணம், தொண்டர்கள் தங்கள் தலைவரின் மரணத்திற்காகக் கல் மழைகளால் அர்ச்சனை செய்து கண்ணாடிகளைக் காயாக்கி விட்டனர்.
பற்றி எரியும் தேசப் பற்று
சிதை மூட்டப்படும் தலைவரின் உடலை நினைவில் கொள்ளும் விதமாக பயணிகளுடன் ஒரு சில பேருந்துகள் தீயில் பற்றி எரிந்தன. தொண்டர்கள் அல்ல! குண்டர்களின் பற்றி எரியும் தேசப் பற்றை இந்தச் சுவாலைகள் நன்றாகவே படம் பிடித்துக் காட்டின.
தலைவரின் இந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக முராரி ராகத்தில் ஒரு சோகக் கவிதையை கவிஞர் ஒருவர் கரகரத்த குரல், இரக்கத்துடன் வாசிக்கும் ஒலி நாடாக்கள் ஓலமிட்டன.
கருவறுக்கப்படும் சிறுபான்மையினர்
இதற்கிடையே மறைந்த தலைவர் சாதாரணமாக இறக்கவில்லை, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி பரவியது தான் தாமதம். சிறுபான்மைச் சமுதாயத்தினர் பல்லாயிரக் கணக்கானோர் பழி வாங்கப் பட்டனர். அந்தப் பழி வாங்கும் படலத்தில் பச்சிளம் குழந்தைகள், பல் இழந்த முதியவர்கள், பலவீனமான பெண்கள் யாரும் விட்டு வைக்கப் படவில்லை.
தலைவரது பூத உடல் தீ மூட்டப் படுவதற்கு முன்னால் பல்லாயிரக் கணக்கான உடல்கள் உயிருடன் தீ மூட்டப்பட்டன. பெரிய ஆலமரம் கீழே சாயும் போது, புல் பூண்டுகளுக்கு அழிவு ஏற்படத் தான் செய்யும் என்று அந்தப் படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
தொலைக்காட்சிகள் தொடர்ந்து அழத் துவங்கின. கேளிக்கைகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், தலைவரின் சடலத்தைக் காட்டி வெறும் வயனை வாசிப்பது கண்டு பருவ வயதினர் வேதனை அடைந்தனர். தொலைக்காட்சியில் தலைவரின் சவத்தைக் காட்டி வாசிக்கப்பட்ட கருநாடக இசையைக் கேட்டவர்கள் கருநாகமாயினர். சனியனை எப்போது தூக்கிக் கொண்டு நெருப்பில் போடப் போகின்றனர்? என்று ஏங்கியவாறு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அரசு அலுவலகங்கள், வணிகத் தலங்கள், நீதிமன்றங்கள், பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. தலைவரின் மறைவை நல்ல சகுனமாக எண்ணிய மாணவர்கள் மட்டையைத் தூக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் சென்றனர். தேசியக் கொடி மற்றும் கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன.
சந்தனத்தில் சவப் பெட்டி
மலர்களுக்கு ஊடே குளிர் சாதனக் கண்ணாடிக் கூண்டுக்குள் தலைவரின் உடல் குளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மீது தேசியக் கொடி போர்த்தப் பட்டிருந்தது. அருகில் உருகி வழியும் மெழுகுவர்த்திகள், உருக்குலைந்து எரிந்து கருகும் ஊது பத்திகள்.
பன்னாட்டுத் தலைவர்கள் மாறி மாறி வந்து பூத உடன் பாத அடியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வணக்கம் செலுத்தும் காட்சி தொலைக்காட்சியில் நேர்முகமாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்காகவும் மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் அளவுக்குப் பாழாக்கப் பட்டது.
மற்றவர்களுக்கு சாதாரண சவப் பெட்டி! இவர் தலைவரல்லவா? அதனால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து சந்தனப்பெட்டியில் இவரது உடல் வைக்கப்படுகின்றது.
அறிவிக்கப்பட்ட நேரம் ஆனதும், இராணுவம் உடலைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மயானத்தை நோக்கி நகர்ந்தது. ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை பொடி நடையாக ஐந்து மணி நேரம் கடந்து சென்றது.
இறந்தவருக்கு ஏக்கர் நிலம்
வாழ்கின்ற பாட்டாளி ஏழை ஒண்டுவதற்கும் ஒதுங்குவதற்கும் பத்துக்குப் பத்து நிலத்தை வழங்க முன் வராத கல் மனம் படைத்த அரசு, தலைவரின் உடல் தகனத்திற்காக மக்கள் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்கின்றது. இப்படித் தாரை வார்க்கப்பட்ட அந்நிலத்தில் இராணுவம் குண்டு மாரிப் பொழிகின்றது. சந்தனப் பெட்டி சவக்குழியில் இறக்கப்படுகின்றது, அல்லது எரிக்கப்படுகின்றது. அடக்கி முடித்ததும் தொலைக்காட்சி தன் ஒளிபரப்பை நிறுத்திக் கொள்கின்றது.
பளிங்கினால் ஒரு மயானம்
இதன் பின்னர், தலைவரின் பூத உடல் அடக்கப்பட்ட அந்த இடம் நினைவுச் சின்னமாக்கப்படுகின்றது.
குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க வீடும் இல்லாமல் தவிக்கும் பாட்டாளி வர்க்கம் சாலைகளில் குடியிருக்கும் இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலர் தலைவருக்காகத் தாரை வார்க்கப் பட்டது மட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் செலவில் பளிங்குக் கற்கள் பதிக்கப்படுகின்றது.
சாகாமல் செத்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் சாமான்யனின் வீட்டில் இவர்கள் விளக்கேற்ற முன்வர மாட்டார்கள். ஆனால் செத்துப் போன அந்தத் தலைவரின் சமாதியில் அணையா விளக்கு ஏற்றுவார்கள். இந்தச் சமாதியைப் பராமரிப்பதற்கு மாதந் தோறும் பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்வார்கள்.
ஊரார் வீட்டுக் காசை இப்படி ஊதாரித்தனமாக, உயிரற்ற ஒரு சடலம் அடங்கிய சமாதிக்காக தண்ணீர் போன்று அள்ளிக் கொட்டப்படுகின்றது.
இந்தக் கட்சியின் தலைவர் தலையைப் போட்ட பின் அந்தக் கட்சி தேர்தல் தோற்று விட்டால் அடுத்த கட்சி ஆட்சிக்கு வருகின்றது. அப்போது அந்தத் தலைவரின் மரணத்தையொட்டி நடந்த கலவரத்திற்கு விசாரணைக் கமிஷன் போடப்பட்டு அதற்கும் கோடிக் கணக்கில் வரிப் பணம் வாரி இறைக்கப்படுகின்றது.
நீத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்
விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது, பாதிக்கப்பட்ட சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்காக கோடிக்கணக்கில் நிவாரணத் தொகை வழங்கப் படுகின்றது. இதுவும் மக்களின் வரிப் பணத்திருந்து தான்.
ஒரு தலைவரின் மரணத்தை ஒட்டி பாழாக்கப்படும் அரசாங்கப் பணம், சேதப்படுத்தப்படும் அரசாங்க மற்றும் தனி நபர் சொத்துக்கள், நிறுத்தப்படும் போக்குவரத்துக்கள், பாதிக்கப்படும் வியாபாரப் பெருமக்கள், பறிக்கப்படும் மனித உயிர்கள் என்று பாதிப்பு மற்றும் இழப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இவை நம் நாட்டின் தலைவிதிகள்.
முண்டம் மூட்டுகின்ற மோதல் தீ
சரி! தலைவர் இறந்து விட்டார். கலவரம் ஓய்ந்து விட்டது. இத்துடன் முடிந்தது சங்கதியும் சமாச்சாரமும் என்றில்லை. அமரர் ஆன அவர், ஐம்பொன்னில் அல்லது வெண்கலத்தில் அல்லது கருங்கல்ல் சிலையாகி நகரத்தின் முச்சந்தியில் அரசு அலுவலக வாசல்களில் எழுந்து நிற்பார்.
இருக்கும் போது இரு சாதியினரை மோத விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர், இறந்த பின்னும் சிலையாக எழுந்து நின்று கலவரத் தீயை மூட்டுகின்றார். அந்தச் சிலையின் தலையை இவரது எதிர் ஜாதியினர் எகிறி விட்டதால், முண்டமாக நின்று கொண்டு மோதலை மூட்டி விடுகின்றார். அதனால் ஏற்படுகின்றது ஜாதிக் கலவரம்.
சிறையிடப்பட்ட சிலைகள்
ஏற்கனவே மக்களின் வியர்வைத் துளிகளில் விளைந்த வரிப் பணம் பல இலட்சக் கணக்கில் இந்தச் சிலை வைப்பதற்கும், வார்ப்பதற்கும் வாரி இறைக்கப்பட்டதை நினைத்து வயிறு எரிந்து கொண்டிருக்கையில் இப்போது பல இலட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்து சிலைகளுக்கு சிறைக் கம்பிகள் போட்டு காவல் வைப்பார்கள். அதனால் சிலைகளின் தலைகள் இனி உடைக்கப் படாமல் இருப்பதற்காக இப்படி ஒரு காவல்! உயிருடன் இருக்கும் போது கம்பி எண்ணியது போன்று இப்போதும் தலைவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றார். மக்கள் வரிப் பணத்தில் இதற்காகவும் ஒரு செலவு!
இரு சாதியினருக்கு இடையில் ஏற்பட்ட வகுப்பு மோதல் பல உயிர்கள் ப! உறுப்புகள் ஊனமாகி, முடமாகிப் போனவர்கள் பல ஆயிரம்! எரிக்கப்பட்ட பேருந்துகள், எரிந்து சாம்பலான வணிகக் கூடங்களின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். இவை தான் இந்த நாட்டின் தலை விதிகள்.
பகுத்தறிவுக் கழகங்களா? பைத்தியக்கார விடுதிகளா?
இது யார் அப்பன் வீட்டுப் பணம்? இதற்கு எல்லாம் காரணம் பச்சைப் பைத்தியக்காரத்தனம் தான். வடபுலத்து நாத்திகர் நேரு மாமா, தென்னகத்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்ற பகுத்தறிவுப் பறவைகளுக்கும், அவர்கள் பொரித்து விட்டுப் போன வீரமணிக் குஞ்சுகளுக்கும் இந்தச் சிலை வடிப்பு என்பது ஒரு பைத்தியக் காரத்தனம் என்பது புரியாமல் போய் விட்டது. இது பற்றி அவர்களின் புத்தி மழுங்கிப் போய் விட்டது.
இது பற்றித் தெளிவான ஞானம் இருந்திருக்குமானால் இந்தத் தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களில், தாங்கள் பதவி ஏற்கும் நாட்களில் போய் இந்தச் சிலைகளுக்கு மாலை போடும் மடமைத்தனத்தை, மவ்ட்டீகத்தனத்தைச் செய்திருக்க மாட்டார்கள்; தினந்தோறும் பறவைகள் நின்று கொண்டு எச்சம் போட்டு, அபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகளுக்கு மரியாதை கொடுக்க முன் வந்திருக்கமாட்டார்கள்.
எனவே இவர்கள் கண்டிருப்பது பகுத்தறிவுக் கழகங்கள் அல்ல! பைத்தியக்கார விடுதிகள் தான் என்பது நிரூபணமாகின்றது.
ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில், ஒரு பதினைந்து நூற்றாண்டு காலமாக எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாத, ஓர் அற்புத அறிவியல் வேதத்தைத் தன்னகத்தே கொண்ட இஸ்லாத்தை இந்த அறிவு ஜீவிகள் இன்று கிண்டலடிக்கின்றார்கள்; கேலி செய்கின்றார்கள்.
சவூதி மன்னர் மரணம்
இந்த வேதம் போட்ட இந்த அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ்! இவர் ஒன்றும் சாதாரண நடிகர் ராஜ்குமாரைப் போன்றவர் அல்ல! உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர். சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.
இந்த அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற்ற மன்னர் இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை. அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் வார்த்தைகள்.
''லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் லி வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என்று அந்தக் கொடியில் பொறித்திருப்பது அந்த நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் பிரகடனமாகும். அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும் அந்த நாட்டின் கொடி சாயவில்லை.
குடியும் சாகவில்லை!
இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி விட்டது. ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில் அடக்கம் செய்வது கடமையாகும். இதைத் தான் அந்நாட்டு மக்கள் செய்தனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை. பஸ், கார், ரெயில் போக்குவரத்து பாதிக்கவில்லை. அரசு அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்தப்படவில்லை. அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும் சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும் கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர் இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும் அங்கு பற்றி எரியவில்லை.
இந்த அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும் பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம் என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே! இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம் கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர் இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப் பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.
ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் தான் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப் பட்டார்.
மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல் (அடையாளத்துக்காக) வைக்கப் பட்டது. அதில் மன்னர் என்ற பெயர் கூட பொறிக்கப்படவில்லை. ஆண்டியும் இங்கே! அரசனும் இங்கே! என்ற கவிஞன் கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக சவூதி மன்னரின் சமாதி பொது அடக்கத்தலத்தில் அமைந்தது. இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால் அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும் கருதி விடக் கூடாது.
பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக், சிரியாவின் தலைவர் பஷரத் அல்அஸத், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் போன்ற பன்னாட்டுத் தலைவர்கள் வருகையளித்திருந்தனர்.
தரை மட்டமான தனி நபர் வழிபாடு
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. அரசுப் பணம் சாம்பலாகும் வகையில் அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக் காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம் தகர்த்தெறிந்தது தான்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி, மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட மேலானவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
அவர்கள், தாம் இறந்த பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும் வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக தமது வாழ்நாளில் எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1390)
அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன் அடிப்படையில் தான் சரியான முஸ்ம்கள் தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள் எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!
''தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் 1609
இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்
பொதுவாக கடந்த காலம் தொட்டு இன்று வரை இறந்து விட்ட பெரியார்களுக்காக நினைவாலயங்கள் எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.
பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது, இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம் செய்யும் அரக்க குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.
சரியான சிந்தனைத் தெளிவோட்டம், பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான் சரி காணும். அதனால் தான் இந்து நாளேட்டின் சவூதி மன்னர் மரணச் செய்தியில்...
அரசு மரியாதை இல்லை! காரணம் அது இஸ்லாத்தில் இல்லை! கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவில்லை! காரணம் அதில் இஸ்லாமிய கொள்கைப் பிரகடனம் பொறிக்கப் பட்டுள்ளது. மன்னரின் பூத உடல் பொது மயானத்தில் அடக்கப்பட்டது....
என்பன போன்ற சிறப்புக்களை சிலாகித்துக் கூறி நிற்கின்றது.
மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும் இந்த வழி காட்டுதலைத் தான் தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும். அப்போது தான் நடிகராக இருந்தாலும், நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது எந்தக் குடிமகனும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.
அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின் மரண விஷயத்தில் நடந்து கொண்ட விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப் பிடிப்பதாக அமைகின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களிலும் ஆலிம்கள், பெரிய மனிதர்கள், கொடை வள்ளல்கள் இறந்து விட்டால் வானளாவிய மனாராக்கள் எழுப்பும் இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக் கொடுக்கின்றது.
ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின் சாதாரண அடக்கம் மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல! முஸ்ம்களுக்கும் தகுந்த பாடத்தையும் படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால் மிகையல்ல!
No comments:
Post a Comment