மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றும் தீவிரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திக் விஜய்சிங்.
புலனாய்வு அமைப்புகள் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹேமந்த் கார்கரே கொல்லப் படுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் மாலேகான் குண்டுவெடிப்பை விசாரணை செய்து பெண் ஹிந்து பயங்கரவாத சாமியாரை கைது செய்ததால் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தம்மிடம் தெரிவித்தார் என்றும் அது குறித்த தொலைபேசி அழைப்பு வந்த தகவல்களை முன்னர் தெரிவித்து இருந்தார் திக் விஜய்சிங்.

No comments:
Post a Comment