அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

இந்தியாவில் முக்கிய அணைகளை தகர்க்கதிட்டம்: பயிற்சியில் பயங்கரவாதிகள் ; உளவுத்துறை திடுக்

புதுடில்லி: இந்தியாவில் வடமாநில பகுதியில் உள்ள முக்கிய அணைகளை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாஉத்வா பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட மாநில போலீசார் எச்சரிக்கையாக இருக்குமாறும் இன்டலிஜென்ஸ் படையினர் அலர்ட் செய்தி அனுப்பியுள்ளனர்.
நமது உளவுபடை அதிகாரிகளக்கு கிடைத்த தகவல் விவரம் வருமாறு: இந்தியாவில் பஞ்சாப், அரியானா, மற்றும் இமாசல பிரதேசத்தில் <உள்ள அணைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். வரும் மழைக்கால நேரத்தில் அணையில் நீர் பெருக்கி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்த முயற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாப், அரியானா, சண்டிகார் மற்றும் டில்லி பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி முடியும். மேலும் இது தொடர்பான செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்றும் பயங்கரவாதிகள் மனதளவில் தயாராகி வருகின்றனர். இவர்கள் இதற்கென அணையில் சுவர் உயரம் அறிந்தும், மற்றும் தண்ணீருக்குள் நீச்சல் அடித்து செல்லும் விஷயத்தில் முழு அளவில் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. 

முக்கிய குறியாக பக்ரா நங்கல் அணை: இதில் பஞ்சாப்- இமாசல பிரதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்ராநங்கல் அணையை தகர்ப்பது பயங்கரவாதிகளின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனராம். காரணம் இந்தியாவின் சட்லஜ் நதிப்பகுதியில் உள்ள இந்த அணை இந்தியாவில் மிகப்பெரியது.இந்த அணை இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஜவஹர்லால் நேரு முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஆயிரத்து 300 மில்லியன் கியூபிக் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதற்கு சேதம் ஏற்படுத்தும் நேரத்தில் பெரும் அளவில் நாசத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் விவசாய பணிகளை சீரழிக்க முடியும் என்றும் பயங்கரவாதிகள் கருதியுள்ளனர். 

இதனால் மேற்கூறிய 3 மாநில போலீசார் உயர்ந்தபட்ச பாதுகாப்பில் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா- பாகிஸ்தான் நீர் பகிர்வு தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத இந்நேரத்தில் அணை தகர்ப்பு திட்டம் , பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் சுமையை தந்திருக்கிறது.

No comments: