அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

சொல்கிறார்கள்!!!

லாபகரமான தொழில் விவசாயம்!அமெரிக்காவில், ஐ.டி., வேலையை உதறிவிட்டு, விவசாயிகளுக்காக உதவும் வெங்கட் சுப்ரமணியம்: நான் ஐ.ஐ.டி.,யில் ஆர்கிடெக் படித்து விட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காய்கறிக்கும், எங்கள் பரம்பரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளிநாட்டுக்காரனுக்கு கூலியா இருக்கிறத விட, நம் நாட்டில், யாருமே கவனிக்காத துறையில் சாதிக்கணும்ங்கிற எண்ணத்தில், என் வேலையை விட்டு, சென்னையில் காய்கறி வியாபாரத்தை தொடங்கினேன்.தொடக்கத்தில் சில விவசாயிகளை சந்தித்து, அவர்கள் மூலம் பொருட்களை வாங்கி, வீட்டருகில் உள்ள சேரி மக்களுக்கு, குறைந்த விலைக்கு விற்றேன். பின், அவர்களின் உதவியுடன் விற்பனை செய்தேன். கிடைக்கும் லாபத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இது நல்ல பலன் தரவே, மொபைல் காய்கறி கடைகளை உருவாக்கினேன்.அதாவது, காய்கறிகளை மொத்தமாக வேனில் ஏற்றி, கடற்கரையில் சென்று விற்பது. இதற்கும் நல்ல பலன் கிடைத்தது.சென்னையில், காய்கறிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு நாங்கள், சந்தை விலைக்கே விற்பனை செய்கிறோம்.காய்கறி குறித்து டேடா பேஸ் உருவாக்கியுள்ளோம். இதன் அடிப்படையில், என்ன விலை, எங்கு விளைகிறது, எப்போது எந்த சீசன், யார் விளைவிக்கின்றனர் போன்ற தகவல்கள், விரல் நுனியில் உள்ளன. மேலும், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். படித்தவர்கள் விவசாயத்தை கையில் எடுத்தால், இதை விட லாபகரமான தொழில் வேறு இல்லை.கடின உழைப்புக்கு தயாராக இருந்தால், எதிலும் சாதித்து விடலாம்.

No comments: