அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, July 13, 2011

லிபியா மீதான தாக்குதலுக்கு உதவ முன்வரும் ஜர்மனி..


லிபியா மீது நேட்டோ படைகள் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வான்வளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. அப்பாவிப் பொதுமக்களின் இழப்பு இதுவரை சரியாகக் கணிப்பிடப்படவில்லை. இப்போது யுத்தம் புரியும் நாடுகளான பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியவை வெடிமருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்த பின்னர், ஜேர்மனி அதனை வழங்க முன்வந்துளது. பேர்லின் ’50 குண்டுத் தொகுப்புக்களை” வழங்கத் தயாராக இருப்பதாக செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவின் பெற்றோலிய மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையிடும் நோக்கோரு நேட்டோ நாடுகள் தொடுத்துள்ள தாக்குதல் இப்போது மூன்று மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது.இழப்புக்கள் குறித்த பெரும்பாலன செய்திகள் மேற்கு ஊடகங்களால் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன.

No comments: