கம்பம் : எத்தனை நவீன கருவிகளும், கண்டுபிடிப்புகளும் வந்தாலும், நெல் வயலில், பரம்பு அடிப்பதற்கு காளை மாடுகள் பூட்டிய கருவி தான், இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கில், அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது. விவசாயத்தில், இன்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. களை எடுப்பதற்கும், நாற்று நடவு செய்வதற்கும், அறுவடைக்கும் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.
நெல் விவசாயத்தில், வயலில் உழவு முடிந்த பின், நாற்று நடுவதற்கு முன்பாக வயலை சமப்படுத்த, "பரம்பு' அடிப்பர். அதற்கு காளை மாடுகள் பூட்டி, பரம்பு அடிக்கின்றனர். டிராக்டர் மற்றும் அதற்குரிய கருவிகளில், இதை செய்ய முடியாது என, விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், "கம்பம் பள்ளத்தாக்கில் வயல்கள் சிறிய அளவுகளில் உள்ளன. நவீன கருவிகளில் பரம்பு அடித்தால், சரியாக இருக்காது. காளை மாடுகள் பூட்டி பரம்பு அடித்தால் தான், திருப்தியாக இருக்கும்' என்றனர். விஞ்ஞானிகள், எத்தனை தான் கருவிகளை கண்டுபிடித்து கொடுத்தாலும், பாரம்பரிய முறைகளையும் விவசாயிகள் புழக்கத்தில் வைத்துள்ளனர் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment