அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, July 7, 2009

50 ஆண்டுகள் சிறையில் இருங்கள்: மகாராஷ்டிர அரசு கண்டிப்பு

மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், குற்றவாளிகளுக்கு 50 ஆண்டு கால சிறைவாசம் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கண்டிப்பாகக் கூறியது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், குற்றவாளிகளான சலீம் மிஸ்ரா சாயிக், நியாஸ் சாயிக், சாயிக் அலி, மொயின் குரேஷி ஆகியோர் 14 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டனர்.



இவர்கள் முன்னர் 1993ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள். இவர்கள் வழக்கை தடா கோர்ட் விசாரித்து தண்டனை அளித்தது. இந்நிலையில், தங்கள் தண்டனை காலம் முடிவடையும் நிலையில் விடுவிக்கும்படி, மும்பை ஐகோர்ட்டில் இந்நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், இது குறித்து முடிவு எடுக்கும்படி மகாராஷ்டிர மாநிலத்தை கேட்டுக் கொண்டது. ஏனெனில், குற்றவாளியின் நன்னடத்தையை அடுத்து, தண்டனை குறைப்பு முறையில் குற்றவாளியை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.



நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அவ்வழக்கில் குற்றவாளிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தண்டனைக் குறைப்பு அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்ட குற்றவாளிகள், சிறையில் 30 ஆண்டுகளாவது கழிக்க வேண்டும். எனவே, நான்கு பேரும் 50 ஆண்டுகள் அல்லது குற்றவாளியின் 65 வயது வரை சிறையில் கழிக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



No comments: