அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, July 6, 2009

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை


ராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பது அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி மிரட்ட துவங்குவது தெரியவந்தது.

மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.

பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள் ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன��
__._,_.___

No comments: