அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 9, 2009

ஈராக் சிறைகள் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தொடர்கின்றது!

ஈராக் பெருநகரங்களிலிருந்து அமெரிக்கப் வீரர்கள் வெளியேறிவருவது அறிந்ததே. எனினும், அமெரிக்கர்களால் பராமரிக்கப்பட்டு வரும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு இன்னும் அமெரிக்கர்களிடமே உள்ளது.ஈராக்கியர்களிடம் இந்தச் சிறைகளின் பொறுப்பை ஒப்படைக்க இன்னும் சில மாதங்கள் ஆகுமாம்.
பாக்தாத்திற்கு புறநகரான கேம்ப் குரோப்பரில் சுமார் 3,500 கைதிகள் இருந்து வருகின்றனர். இந்தச் சிறையில் முழுப் பாதுகாப்பும் ஈராக்கியர்களிடம் ஒப்படைக்க வேண்டமானால் மேலும் பல பயிற்சிகளை ஈராக்கியர்களுக்குத் கொடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று அமெரிக்கத் தளபதிகள் கருத்து தெரிவித்தள்ளனர்.இப் பயிற்சிகளில் இதுவரை பாதியளவுக்குத் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து பயிற்ச்சியளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கப் பொறுப்பில் இருக்கும் கைதிகளுக்கான பொறுப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் டேவிட் குவாண்டோ கூறியுள்ளார்.இந்தச் சிறையில் ஆரம்பத்தில் 26 ஆயிரம் கைதிகள் இருந்தனர். இப்போது 10 முதல் 11 ஆயிரம் எண்ணிக்கையிலான கைதிகளே இருந்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.சிறைப் பாதுகாப்புப் பயிற்சியை அளிப்பது மிக எளிதானது. நடுத்தரக் கண்காணிப்பாளர்கள், தளவாடப் பொருள் கண்காணிப்பாளர்கள், சிறை வார்டன்கள் ஆகியவர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்குவது மிக எளிதானது என்று கூறிய அவர் அதைத்தான் இப்போது தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இப்போது 800 ஈராக் அதிகாரிகள் கேம்ப் குரோப்பரின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு 900 ஆயிரம் அமெரிக்க அதிகாரிகளும் பயிற்சியளித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: