அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, November 24, 2009

உலகின் கவர்ச்சிகரமான நிறுவனமாக கூகுல் தேர்வு


உலகின் கவர்ச்சிகரமான நிறுவனமாக கூகுல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலாணமை மற்றும் பொறியல் மாணவர்களின் ஆக விருப்பமான நிறுவனமாகவும் கூகுல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரபல தணிக்கை நிறுவனம் பிரைஸ் வாட்டர் ஹவுஸ்(சத்யம் கம்புயூட்டர்ஸ் நிறுவனத்தை தணிக்கை செய்தவர்கள்) மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனமும். மூன்றாம் இடத்தில் ஐபிஎம் நிறுவனமும், நான்காம் இடத்தில் பிரபல ஜெர்மன் கார் நிறுவனம் பிஎம்டபிள்யூ-ம், ஐந்தாம் இடத்தில் இண்டெல் நிறுவனமும் வந்துள்ளன.

ஜப்பானின் சோனி நிறுவனம் மட்டும் 7-வது இடத்தை பெற்றுள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: