அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, November 25, 2009

தொடரும் காங்கிரசின் சித்து விளையாட்டு

பத்திரிகைகளுக்கு ரகசியமாக கிடைத்த லிபரான் கமிஷனின் அறிக்கையின் பாகங்கள் முற்றிலும் சரியானவையே என்பதும், வலது சாரி மதசார்பற்றக்கொள்கையின் புகழ்பெற்ற தேசிய தலைவராக மின்னிய முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயி உள்பட பா.ஜ.க வின் மூத்த தலைவர்களின் பூரண ஆதரவோடுதான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது என்பது நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது தெளிவானது.
பாப்ரியின் மினாராக்கள் மீது ஏறி வலம் வந்து இரும்பு கம்பிகளும், வெடிப்பொருள்களும் பயன்படுத்தி தகர்த்த மதவெறி பிடித்த ஹிந்து பயங்கரவாதிகளை விட அதிக குற்றம் புரிந்தவர்கள் இஸ்திரிபோடப்பட்ட சட்டையுடனும் உதட்டில் புன்சிரியுடனும் நாட்டை ஏமாற்றி வலம் வந்துக்கொண்டிருக்கும் சங்க்பரிவாரின் மூத்த தலைவர்கள் என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி லிபர்ஹான் தமது விசாரணை அறிக்கையில் தெளிவுப்படுத்துகிறார்.
கமிஷன் சுட்டிக்காட்டும் 68 பேரில் ஒருவர் கூட ஹிந்துத்துவா சக்திகள் அல்லாதோர் இல்லை. சமீபத்தில் முலாயாம் சிங்கோடு இணைந்து தனது பாவ கறையை கழுக முயற்சித்த உ.பி.முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் அரசு இயந்திரம் முழுவதையும் அரைக்கால் ட்ரவுசர் கூட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்நாட்டின் மிக உயர்ந்த நீதிபீடமான உச்சநீதிமன்றத்தில் பொய்கூறியபொழுது சங்க்பரிவாரின் தலைவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதை பாதுகாப்போம் என்ற உறுதியை வழங்கினர். மஸ்ஜிதை தகர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அவகாசத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக அவர்கள் நடத்திய கபட நாடகங்கள் தான் இவையெல்லாம். பதவி மோகம் பித்துபிடித்த சங்க்பரிவாரம் நடத்திய சதியாலோசனைகள் வெறுப்பின் உச்சகட்டம்.
ஆனால் குற்றவாளிகளை என்னச்செய்யவேண்டும் என்பதில் தெளிவான தீர்வைக்கூறாத நீதிபதி லிபர்ஹான் தனது தலைதப்புவதற்காக மதத்தை துஸ்பிரயோகம் செய்ததாகவும் என்பது போன்ற சிறந்த ஆலோசனைகளை கூறி முடித்துவிட்டார். அதே நிலைதான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொடர் நடவடிக்கை அறிக்கையிலும் காணப்படுகிறது.
வகுப்பு வன்முறைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரப்படும் என்பதுதான் உள்துறை அமைச்சரின் முக்கிய பரிந்துரை. சுதந்திரத்திற்கு பின்னால் காங்கிரஸ் தலைவர்கள் அரசு சார்பாக நடத்தப்படும் செமினார்களில் கூறும் புளித்துப்போன உபதேசங்கள்தான் இவை.
அரசியல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி மனிதநேயம் சிறிதும் இல்லாத வெட்கம் கெட்ட இந்த தேசத்துரோகிகளை சிறைக்கொட்டகைகளில் அடைக்க நாட்டில் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை நிறைவேற்ற இந்நாட்டை ஆள்வோருக்கு திடமான உறுதியும் விருப்பமும் இருக்கவேண்டும். சங்க்பரிவாரின் தீவிர ஹிந்துத்துவக்கொள்கைக்கு பதிலாக மிதவாத ஹிந்துத்துவாவை பின்பற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதற்கான துணிச்சல் இல்லை என்பது மீண்டும் தெளிவாகிறது. அவ்வாறெனில் பத்திரிகைகளுக்கு இவ்வறிக்கை ரகசியமாக கிடைக்கச்செய்து நாட்டுமக்களின் கவனத்தை திசைதிருப்பியதில் அரசிற்கு பங்குண்டுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாட்டின் அவமானம் இது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: