அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

காஸ்ஸாவுக்க காத்திருக்கும் உதவிக் கப்பல்கள்

கல்மனமும் கரைந்து விடும் காஸ்ஸாவின் கதி கேட்டால்.அத்தனை துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் அங்குள்ள மக்கள்.

பசி, பட்டினி தொடர்கிறன்றன. வெயிலுக்கும், குளிருக்கும் அண்ட உறைவிடமில்லை, உயிர் காக்கும் மருந்து இல்லை, குழந்தைகளுக்குப் பால் இல்லை, சத்தான ஆகாரங்கள் இல்லை. அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் அல்லல்களை சொல்லி மாளாது இத்தனை துன்பங்களுக்கும் காரணம் அதனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல்.

காஸ்ஸா மக்கள் மேல் இறக்கம் கொண்டு ஈரநெஞ்சம் உள்ளவர்களால் அனுப்பபடும் உதவிக் கப்பல்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகின்றது.

செம்பிறை அமைப்பினர் (Red Crescent) இப்பொழுது ஒரு கப்பல் நிறைய உதவிப் பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர். ஈரான் வெளியுறவுத் துறையின் அனுமதிக்காக அவை காத்து நிற்கின்றன.

"நாங்கள் தயாராக இருக்கின்றோம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம்"என்று மூத்த செம்பிறை அதிகாரி ஒருவர் கூறினார்.

உதவிப்பொருட்களை ஏந்தியுள்ள முதல் கப்பல் இந்த வாரத்தில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈரான் மக்கள் காஸ்ஸா மக்களுக்கு உதவிகள் புரிவதற்காக அங்கே செல்வதற்கு தயாராக தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் பலர் தன்னார்வத் தொண்டர்களாக(volunteers) இரண்டாவது கப்பலில் செல்வார்கள்.

No comments: