ராஞ்சி : மாவோயிஸ்ட் கமாண்டர் கிஷன்ஜி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட்டில், மாவோயிஸ்ட்கள் நேற்று 2வது நாளாக தண்டவாளத்தை தகர்த்தனர்.
கிஷன்ஜி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாவோயிஸ்ட்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் அறிவித்தனர். ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் கடந்த 3ம் தேதி இரவு தகர்க்ப்பட்டது.
இந்நிலையில் தன்பாத் மாவட்டம் நிஷித்பூர் மற்றும் மடாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டாவாளத்தை மாவோயிஸ்ட்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுவைத்து தகர்த்தனர். தன்பாத்&காரக்பூர் பயணிகள் கடந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், பயணிகள் தப்பினர். பலாமாவ் மாவட்டத்தில் வட்டா அலுவலகம் ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நேற்று 2வது நாளாக பேராட்டம் நடந்ததால் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரிகளும் ஓடவில்லை.