அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

குஜராத்: காணாமல் போன 228 பேர் இறந்தவர்களாக அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்ததற்குப் பின்னர் நடந்த மதக் கலவரத்தின்போது காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு கோத்ராவில் ராம பக்தர்கள் சென்ற ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை விரட்டி விரட்டி கொலை செய்தனர் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் கலவரத்தில் 952 பேர் கொல்லப்பட்டனர். 228 பேர் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அந்த வகையில், குஜராத் கலவரத்தின்போது காணாமல் போன 228 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்கப்படவுள்ளனர். இதையடுத்து குஜராத் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1180 ஆக உயரும்.

இதுகுறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த் சிங் கூறுகையில், காணாமல் போனவர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளோம். இவற்றை வருவாய்த்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள், இவர்களை இறந்தவர்களாக அறிவிப்பார்கள்.

அதன் பின்னர் வருவாய்த்துறை இந்தப் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கும் என்றார்.

இதற்கிடையே அகமதாபாத் கலெக்டர் ஹரீத் சுக்லா கூறுகையில், காணாமல் போனவர்கள் பட்டியலை போலீஸாரிடமிருந்து இன்னும் நாங்கள் பெறவில்லை. அதற்காக காத்திருக்கிறோம்.

பட்டியல் கிடைத்ததும், அவற்றில் இடம் பெற்றுள்ளவர்களை இறந்தவர்களாக நாங்கள் அறிவிப்போம். இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிற நபர்களின் இறப்புச் சான்றிதழ் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு உரிய நிவாரணத் தொகைக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


ஷேக் அப்துல் காதர்

No comments: