அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

லஞ்சம் வாங்கிய 'ரா' அதிகாரி - கைது செய்த சிபிஐ!!

டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக, லஞ்சம் வாங்கியதாக ரா அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் டாக்டர் ஏ.எஸ்.நாராயண் ராவ். ரா அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரை டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரூ. 1 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்குவது தொடர்பாக ரூ. 8 லட்சம் கேட்டுள்ளார் ராவ். முதல் தவணையாக ரூ. 1 லட்சம் தருவதாக சென்னை நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் தகவல் சிபிஐக்குப் போனது. இதைத் தொடர்ந்து வலை விரித்த சிபிஐ அதிகாரிகள், கையும் களவுமாக ராவைக் கைது செய்துள்ளனர்.

இதுவரை இப்படி ஒரு சம்பவம் ரா வரலாற்றில் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உளவு பார்க்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் ரா அமைப்புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ராவ் நடந்து கொண்டு விட்டதாக கருதப்படுகிறது.

ராவ் தங்கியிருந்த ஹோட்டலில் சென்னை நிறுவனம் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாம்.

No comments: