அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 7, 2009

அளவுக்கதிகமான விதிமுறைகளே ஊழலுக்கு காரணம்!

அளவுக்கதிகமான விதிமுறைகளே கல்வித் துறையில் ஊழலுக்கு வித்திடுகிறது என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை சமூகப் பணி கல்லூரி ஏற்பாடு செய்திருந்த "வளரும் இந்தியாவில் உயர் கல்வி' குறித்த நிகழ்ச்சியில் வியாழக்கிழமை ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:
உயர் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கென தனி கல்வி வாரியம் தொடங்கப்பட வேண்டும்.
சிவில் விமானங்கள், ராணுவ விமானங்களை இறக்குமதி செய்ய பல கோடிகளை செலவிடுகிறோம். போதிய தொழில்நுட்பம் இருந்தும் நாம் விமானங்களை உள்நாட்டிலேயே கட்டுவதில் முனைப்புக் காட்டாமல் இருக்கிறோம்.
தற்போது 7 லட்சம் டாக்டர்கள்தான் உள்ளனர். ஆனால், 8 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். 15 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போதைய நிலையில் 10 லட்சம் செவிலியர்களே உள்ளனர். அதிகமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், செவிலியர் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.
ஒரு கல்வி நிறுவனம் தொடங்க வேண்டுமெனில் "தடையில்லா சான்றிதழ்' தேவைப்படுகிறது. இது 14 அரசு துறைகளில் இருந்து வழங்கப்பட வேண்டும். சில மாநிலங்களைத் தவிர இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இம்முறைதான் நிலவுகிறது.
கல்வித் துறையில் உள்ள அளவுக்கதிகமான விதிமுறைகள், லஞ்ச லாவண்யத்துக்கு வித்திடுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள 2,300 பொறியியல் கல்லூரிகளில் போதிய தரம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
.

No comments: