அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் கடல் அட்டை பறிமுதல் திமுக பிரமுகர் கைது

ராமேசுவரம், பிப். 27: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளைப் போலீஸôர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திமுக பிரமுகரை கைது செய்தனர்.

கடல் அட்டை, சங்கு, ஆமை, சுறா, கடல் பசு உள்ளிட்ட 53 வகை மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ராமேசுவரம் தீவுப் பகுதியில் கடல் அட்டைகளைப் பிடித்து சுத்தப்படுத்தி இலங்கைக்கு கடத்திச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இந் நிலையில், ராமேசுவரம் திமுக 7-ம் வார்டுச் செயலர் வில்லாயுதம் என்பவரது தென்னந் தோப்பு தனுஷ்கோடி செல்லும் சாலை அருகே உள்ளது. இங்கு கடல் அட்டைகளை சுத்தம் செய்து இலங்கைக்குக் கடத்தவிருப்பதாக ராமேசுவரம் போலீஸôருக்குத் தகவல் வந்தது.

டி.எஸ்.பி. கமலாபாய் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரக்கத்துல்லா, சந்தனமாரி மற்றும் தனிப் பிரிவு போலீஸôர் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது 19 மூட்டைகளில் 500 கிலோ கடல் அட்டை இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம்.

கடல் அட்டைகளையும், அங்கிருந்த டிராக்டர், மினி லாரியையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வில்லாயுதத்தை போலீஸôர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்த கடல் அட்டை, வாகனங்களை மண்டபம் கடல் வாழ் உயிரினக் காப்பக அதிகாரிகளிடம் போலீஸôர் ஒப்படைத்தனர்.

வில்லாயுதம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: