அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 24, 2009

ஆங்கில பாடப் பயிற்சி 25 (Grammar Patterns 7)

இதுவரை Grammar Patterns -1 றின் இலக்கவரிசைப் படி ஒவ்வொரு வாக்கியத்தையும் விரிவாகப் பார்த்து வருகின்றோம். அதன்படி கடந்தப் பாடத்தில் 26 வதாக வாக்கியத்தை விரிவாகப் பார்த்தோம். இன்று விரிவாகப் பார்க்க வேண்டியது 27 வது வாக்கியத்தையாகும். ஆனால் இன்று இவ்வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போவதில்லை. காரணம் இந்த 27 வது வாக்கியம் Perfect Tense வாக்கியமாகும்.

இதனை விரிவாகக் கற்பதற்கு முன் இவ்வாக்கியத்துடன் தொடர்புடைய கிரமர் பெட்டனை (Perfect Tense) இன்று வழங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றோம்.

நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போன்று இதனையும் (வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போல்) மனனம் செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம். மனனம் செய்துக் கொண்டீர்களானால் எமது பயிற்சிகளைத் தொடர்வது மிக எளிதானதாக இருக்கும்.

1. I have done a job. (Present Perfect)
நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.

2. I have just done a job.
நான் இப்பொழுது (தான்) செய்திருக்கிறேன் ஒரு வேலை.

3. I had done a job. (Past Perfect)
நான் செய்திருந்தேன் ஒரு வேலை.

4. I had done a job long ago.
நான் செய்திருந்தேன் ஒரு வேலை (வெகுக்காலத்திற்கு) முன்பு.

5. I wish I had done a job.
எவ்வளவு நல்லது நான் செய்திருந்தால் ஒரு வேலை.

6. I will have done a job. (Future Perfect)
நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

7. I have been doing a job. (Present Perfect Continuous)
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்திருக்கிறேன் ஒரு வேலை.

8. I had been doing a job. (Past Perfect Continuous)
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்திருந்தேன் ஒரு வேலை.

9. I will have been doing a job. (Future Perfect Continuous)
(குறிப்பிட்டக் காலத்தின் பின்) நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

10. He may have done a job.
அவன் செய்திருக்கலாம் ஒரு வேலை.

11. He might have done a job.
அவன் செய்திருக்கலாம் ஒரு வேலை.

12. He must have done a job.
அவன் நிச்சயம் செய்திருக்க வேண்டும் ஒரு வேலை.

13. He would have done a job.
அவன் செய்திருக்க வேண்டும் ஒரு வேலை.

14. He could have done a job.
அவன் செய்திருக்க இருந்தது ஒரு வேலை.

15. He should have done a job.
அவன் செய்திருக்கவே இருந்தது ஒரு வேலை.

16. He shouldn’t have done a job. (should + not)
அவன் செய்திருக்கவே வேண்டியதில்லை ஒரு வேலை.
அவன் அநியாயம் செய்தது ஒரு வேலை. (போன்றும் பொருள் கொள்ளலாம்/பேசலாம்)

17. He needn’t have done a job. (need + not)
அவன் செய்திருக்க (அவசியமில்லை) வேண்டியதில்லை ஒரு வேலை.

18. He will have been done a job.
அவன் செய்திருப்பான் ஒரு வேலை.

19. He seems to have done a job.
அவன் செய்திருப்பான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

20. Having done a job I got experience.
செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை நான் பெற்றிருப்பேன் அனுபவம்.

பயிற்சி

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும் 20 விதமான வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். அவை கூடிய விரைவில் உங்கள் மனதில் பதிந்து விடும். அதுவே ஆங்கிலம் கற்பதற்கான மிக எளிதான வழி.

1. I have done - நான் செய்திருக்கிறேன்.
2. I have written - நான் எழுதியிருக்கிறேன்.
3. I have chosen - நான் தெரிவுசெய்திருக்கிறேன்.
4. I have worked - நான் வேலைசெய்திருக்கிறேன்.
5. I have watched. - நான் பார்த்திருக்கிறேன்.
6. He has spoken - அவன் பேசியிருக்கிறான்.
7. He has started. - அவன் ஆரம்பித்திருக்கிறான்.
8. She has cooked. - அவள் சமைத்திருக்கிறாள்.
9. She has visited - அவள் போயிருக்கிறாள்.
10. She has walked - அவள் நடந்திருக்கிறாள்.

கவனிக்கவும்

இந்த "Perfect Tense" வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் எப்பொழுதும் "Past Participle" சொல்லாகவே இருக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் சொற்களின் வேறுப்பாட்டை "Irregular verbs" அட்டவணையைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் கேள்விகள்

எமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல் கேள்விகளின் அதிகமானவைகள் “Perfect Tense” தொடர்பானதாகவே இருந்தது. அதனாலேயே இவற்றை பிரத்தியேகமான ஒரு பாடமாக வழங்குகின்றோம்.

உதாரணம்: நீ அமெரிக்காவுக்கு போயிருக்கிறாயா? என ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் “ஆம்” என்றோ “இல்லை” என்றோ சுருக்கமாக பதிலளிக்கலாம். ஆனால் “ஆம், நான் பலமுறை அமெரிக்காவுக்கு போயிருக்கிறேன்.” என்று கூற வேண்டுமானால் அப்பதிலை “Present Perfect Tense” வாக்கியத்திலேயே பதிலளிக்க வேண்டியதாக இருக்கும்.

I have visited.
நான் போயிருக்கிறேன்.

I have visited America several times.
நான் போயிருக்கிறேன் அமெரிக்காவுக்கு பல தடவைகள்/பல முறை.

(குறிப்பு: இவ்வாக்கியத்தை போகிறேன், போகின்றேன், போனேன் என்பதுப் போல் குழப்பிக்கொள்ள வேண்டாம்)

மேலும் இப்பாடத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாகத் தொடரும். அப்போது அதனதன் வாக்கியங்கள் தொடர்பாக மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இலங்கை தீவில் சிங்கள இனவாத அரசு எமது உறவுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் முனைப்பாக இருக்கிறது. நடக்கும் கொடூரம் உலகம் அறியாதவாறு செய்தி முடக்கம் செய்து தமிழினப் படுகொலைகள் தொடர்கின்றன. ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகின்றனர். சர்வதேச சமூகமும் கவனிப்பாரற்ற நிலையில் எமது இனம் அழிக்கப்படுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழ் இரத்த பந்தங்களின் “தமிழ் இரத்தம்” கொதித்துக் கொண்டிருக்கின்றது. உலகம் முழுதும் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், தீக்குளிப்புகள் தொடர்கின்றன. இதுவரை எதனையும் எட்டமுடியாமல் உள்ளது. இதுதான் தமிழன் தலை விதியா?

குழந்தையும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்த ஒரு சமுதாயம் இன்று காடுகளில் களப் பழியாகிக் கொண்டிருக்கின்றது. காடுகளில் பாடசாலைகள் இல்லை. கல்விக்கூடங்கள் இல்லை. ஒரு இனத்தின் அறிவையும் கல்வியையும் சிதைத்தால் அந்த இனத்தை எளிதாக முடக்கி விடலாம். அடக்கி ஒடுக்கி விடலாம். இதுவே இலங்கை சிங்களத்தின் இன்றைய போரியல் தந்திரமாக நான் பார்க்கின்றேன். நேற்றுப் பிறந்தக்101 வயது வயோதிபரும் கொல்லப்படுகின்றனர். தமிழரையெல்லாம் "புலி" என பௌத்த சிங்கள அரச பயங்கரவாதம் பலி தீர்க்கின்றது. தமிழருக்கு சார்பான குரல்கள் வெள்ளையனிடம் இருந்து எழுந்தால் அவர்களையும் "வெள்ளைப் புலி" என விமர்சிக்கின்றது. இன்னிலை மாற என்ன செய்வோம் என் தமிழ் உறவுகளே?

இதுதான் இன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களதும் கேள்வியாகும்.

பதில் கல்வி! கல்வி!! கல்வி!!! மட்டுமேயாகும். உங்கள் கல்வி, உங்கள் அறிவு, உங்கள் அறிவியல் ஆய்வுதான் இதற்கு பதிலாக அமைய வேண்டும். ஆம்! இன்னொரு தமிழன் அப்துல்கலாம் ஆக வேண்டும். ஆனால் அவன் தமிழின உணர்வு கொண்டோனாக இருக்கவேண்டும். அவனது ஆய்வு அவனது சீற்றம் சிங்களத் தேசத்தின் தமிழின அழிப்பிற்கு பதிலாக அமைய வேண்டும்.

உணர்ச்சி மிகுந்த தமிழனிடம் அறிவு மிகுச்சியும் உண்டு என்பதை உலகம் உணர வேண்டும். அதன் வீச்சு சிங்கள இன வெறியர்களுக்கு ஒரு நாள் உணர்த்தப்பட வேண்டும். இதனை ஒரு தமிழன் ஒரே தமிழனின் அறிவியல் ஆய்வு ஒரு நாள் நிச்சயம் செய்யும். செய்யப்படவேண்டும்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு பிறகே இப்பதிவை எழுதுகின்றேன். (மனம் ஒன்றி எதனையும் செய்ய கடினமாக உள்ளது.) கால தாமதத்திற்கு மன்னியுங்கள் உறவுகளே! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி
ஆங்கில

No comments: