அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 24, 2009

குஜராத்தில் வாக்காளர் 2 லட்சம் பேர் குறைவு







ஆமதாபாத் : குஜராத்தில் 2007ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை விட, வரும் லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.



இது குறித்து மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலத்தில் தற்போதுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 63 லட்சத்து 91 ஆயிரத்து 757. இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது இருந்த வாக்காளர்களின் எண்ணிகையை விட இரண்டு லட்சம் குறைவு.இதில், பெண் வாக்காளர்களே மிகவும் அதிகமாக குறைந்துள்ளனர். 2007ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 77 லட்சத்து 16 ஆயிரத்து 913. லோக்சபா தேர்தலுக்கான பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 75 லட்சத்து 49 ஆயிரத்து 808. இதில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 105 பெண் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். ஆனால், ஆண் வாக்காளர்களில் 34 ஆயிரத்து 256 பேர் மட்டுமே குறைந்துள்ளனர்.இவ்வாறு மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.



மக்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து செல்லுதல் மற்றும் தொழிலாளர்கள் பிற பகுதிகளுக்கு செல்லுதல் போன்றவற்றாலேயே வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.





.

No comments: