அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 21, 2009

இஸ்லாமும் ஜாஹிலியாதும்


ஒவ்வொரு பொருளும் தனக்கு ஒரு எதிர் பொருளை கொண்டுள்ளது ஒரு பொருள் இருக்கின்றது என்றால், அதனுடைய எதிர் பொருள் அங்கு இல்லை என்று தான் அர்த்தம், இஸ்லாம் என்பதொரு நேரிய உண்மை, அதுவும் தனக்கொரு எதிர்பொருளைக் கொண்டுள்ளது. அந்த எதிர்பொருளை, ஜாஹிலிய்யத்-தாஃகூத், பாதில் என்றெல்லாம் இது அழைகின்றது, ஒவ்வொரு பொருளும் தன்னுடைய எதிர் பொருளை எதிரியாகவே பாவித்து வெறுக்கின்றது எனும் போது இஸ்லாமும் தன்னுடைய எதிர்பொருளை சகித்துகொள்ளவே செய்யாது என்று அறிவு தீர்மானிக்கின்றது.

தீனில் (இறை நெறியை மேற்க்கொள்வதில் ) யாதொரு கட்டயமோ -நிர்பந்தமோ இல்லை . தவறான வழியிலிருந்து நேரானவழி தெளிவாக பிரிக்கப்ட்டுவிட்டது! இனி எவர் தாஃகூத்தை நிராகரித்து அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொள்கிறரோ அவர் திட்டமாக . மிகப்பலமான பிடிமானத்தைபற்றிக் கொண்டவராவார் . அது என்றுமே அருந்துவிடாது ! (அவர் தன்னுடய ஆதரவாளனாக தேர்ந்தெடுத்துக்கொண்ட ) அல்லாஹ் (யாவற்றயும்) செவியுற்வோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான்.


இறை நம்பிக்கை கொண்டோருக்கு பாதுகாப்பளித்து உதவுபவன் அல்லாஹ்தான். அவன், அவர்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும் , இறை நிராகரிப்பை மேற்கொண்டவர்களுக்கு உதவுவோர் , தாஃகூத்களேயாவார்! அவர்கள் இவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர் . அத்தகையவர்கள் நரகவாசிகளேயாவார்! அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் வீழ்ந்துக்கிடப்பார்கள்.
அல்-குர்ஆன் 2:256 / 257

இஸ்லாமியக் கொள்கைக் கோண்த்தில் மட்டும் இப்போது பார்ப்போம். இஸ்லாம் அல்லாத (ஃகைருல் இஸ்லாம்) கொள்கைகள் இல்லாத இடத்தில் தான் , குஃப்ரு இல்லாத இடத்தில் தான். ஷிர்க்கு இல்லாத இடத்தில் தான் இஸ்லாம் இருக்கும்! இரண்டும் ஒன்றுசேரக் காணப்படுவது என்பது அடிப்படையிலேயே தவறான சாத்தியமே இல்லாத ஒன்றாகும். முரண் என்பது இவ்விரண்டுக்குமிடையில் இயற்கையாகவே காணப்ட்டே தீரும்! போராட்டம் என்பது அதன் விளைவாக எழுந்தே தீரும்!!

No comments: