அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 25, 2009

RSS Terrorists are ready..

இளம் வாக்காளர்களை ஈர்க்க ஆர்.எஸ்.எஸ்., தயார்





புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., உட்பட இந்து அமைப்புகளிடம் இருந்து பா.ஜ.,விலகியிருந்தாலும், அந்த கட்சிக்கு ஓட்டு சேகரிப்பதில் ஆர். எஸ்.எஸ்., களம் இறங்க தயாராகி விட்டது. ஆர்.எஸ்.எஸ்., புதிய தலைவராக மோகன் பகவத் பொறுப்பேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப் பின் நடவடிக்கைகளை இன்னும் வேகப்படுத்துவதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.



தேர்தல் சமயம் என்பதால், இளைஞர்களை ஈர்க்க மூன்று வழிகளில் திட்டம் தீட்டியுள்ளார். இளைஞர்களுக்கு உடல் ரீதியாக பலத்தை ஏற்படுத்த ஜுடோ, கராத்தே கற்றுத்தருவது முதல் திட்டம்; படித்த இளைஞர்களுக்கு விழிப்புணர் வை ஏற்படுத்துவது இரண் டாவது திட்டம்; சமூக பணிகளை செய்து மக் களை ஈர்ப்பது மூன்றாவது திட்டம். இதற்காக, நாடு முழுவதும் உள்ள 80 ஆர்.எஸ். எஸ்., முகாம்களை முடுக்கி விட்டுள்ளார் பகவத். அடுத்த மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு கோடை முகாம் களை நடத்த முடிவு செய்துள் ளார். இதில், 80 முகாம்களில் 20 ஆயிரம் பேருக்கு எல்லா வகை தற்காப்பு கலைகளும், உடற்பயிற்சிகளும் கற்றுத் தரப்படும். படித்த இளைஞர்களின் திறமையை பயன்படுத்தி, அவர்களிடையே பயங்கரவாதம், அன்னியர் ஊடுருவல், மத மாற்றம் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு வீடாக பிரசாரம் செய்யும் திட்டத்தில் பல இளைஞர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.



இத்துடன் இந்து மத கலாசாரத்தை சீரழிக்கும் போக்குகளை ஒழிக்கவும் பிரசாரம் செய்யப்படும். அடித்தள மக்களுக்கு பல வகையில் உதவிகளை செய்து சமூக சேவைகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆர்.எஸ்.எஸ்,. அமைப்பை சேர்ந்த 2,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடவும், ஓட்டுச்சாவடிகளில் பணிகளை மேற் கொள்ளவும், பா.ஜ.,வுக்கு உதவுவதற்காக இளைஞர்களை தயார் செய்தும் வருகிறது ஆர்.எஸ்.எஸ்., மதம், மொழி, ஜாதியை தாண்டி, பல்வேறு மக்களிடமும் சென்று, பா.ஜ., வுக்கு ஓட்டளிக்க வேண் டிய அவசியத்தை ஆர். எஸ்.எஸ்., எடுத்துரைக்கும். குறிப்பாக, பயங்கரவாத கொடூரங்களை விளக்கி, மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த சிறிய புத்தகங்களை வினியோகம் செய்தும் பிரசாரம் செய்ய உள்ளது.


'

No comments: