| |
நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன. அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147). நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர். "நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு"(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75). கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது. நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும். நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது. "ஏக ஏவ க்ருஹம் கச்சேத் - ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ: இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது" (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி... - டாக்டர். பி.வி. ராமன்குட்டி). இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர். |
Monday, February 2, 2009
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment