லக்னோ, பிப்.5-
உத்தரபிரதேசத்தில் கடந்த 1992-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரியாக இருந்தவர் கல்யாண் சிங். எனவே, அவர் மீது முஸ்லிம்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அங்கு பா.ஜனதா ஆட்சியை மத்திய அரசு `டிஸ்மிஸ்' செய்தது.
தற்போது பா.ஜனதாவில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு கல்யாண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், `நான் ஆட்சியில் இருந்தபோது, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலமாக எனது நிலையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டேன்' என்று கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment