சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இதுவரை உண்டியல் கிடையாது. பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் அறக்கட்டளை மூலம் வரும் வருமானம் ஆகியவை பொது தீட்சிதர்களால் மேலாண்மை செய்யப்பட்டு வந்தது.
தற்போது அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சித்சபை எதிரே உண்டியல் பொருத்தப்பட்டது.
ஆட்சேபனை
அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள், துணை ஆணையர் ஜகந்நாதன், நிர்வாகி அதிகாரி கே.கிருஷ்ணகுமார் ஆகியோரிடம் ஆலய பொதுதீட்சிதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏ.சம்பந்தம், சிவக்குமார் ஆகியோர் உண்டியல் வைக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.
காலம், காலமாக நடராஜர் ஆலயத்தில் உண்டியல் இல்லாமல் பொதுமக்கள் காணிக்கை மற்றும் அறக்கட்டளை மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கத்தை மாற்றக்கூடாது எனவும், தீட்சிதர்களின் ஆலோசனை பெறாமல் அவரச, அவசரமாக ஏன் உண்டியல் வைக்க வேண்டும் என ஆலய வழக்கறிஞர்கள் எழுத்து மூலம் ஆட்சேபம் தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கையை நம்பியே 400 தீட்சிதர் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தற்போது ஜீவாதார வாழ்வுரிமை பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment