அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

அமெரிக்க டாலருக்கு விலைபோன குரங்குகள்!



கருவிப்பட்டை









தற்போதைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி குறித்து பலரும் பல்வேறுவிதமாக விளக்குகிறார்கள். கழுத்தில் மட்டுமே டாலரைத் தொங்கவிட்டிருக்கும் பாமரர்கள் புரிந்து கொள்வதற்காக எளிய விளக்கம்:

பல வருடங்களுக்கு முன்பு,குரங்குகளுக்கு விலையாக US$ கொடுக்கப்படும் என்று கிராமங்களில் விளம்பரப்படுத்தப் பட்டது. காடுகளில் சும்மா சுற்றித் திரியும் குரங்குகளுக்கு இவ்வளவு விலையா என்று வாய்பிளந்த கிராமவாசிகள்,குரங்களைப் பிடித்து அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர்.

அமெரிக்க டாலர்மீது கிராமவாசிகளுக்கு இவ்வளவு மோகமா என்று வியந்து 1000 குரங்குகளுக்கு 10 US$ என்று விலை நிர்ணயித்தான். சும்மாக் கிடைக்கும் குரங்குகளுக்கு எவ்வளவு US டாலர் கிடைத்தாலும் லாபம்தானே என்று கிராமவாசிகளும் ஆயிரக்கணக்கில் உள்ளூர் குரங்குகளை அமெரிக்க டாலருக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.

ஊரெல்லாம் குரங்குக்கு டாலர் பற்றிய பேச்சுதான்! இதைக் கேள்விப்பட்ட பதினெட்டுப் பட்டி கிராமவாசிகளும் குரங்குகளைப் அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர். உள்ளூர் குரங்குகளை எல்லாம் அந்தந்தக் கிராமவாசிகள் பிடித்து ஏற்கனவே விற்றுவிட்டதால் குரங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.. கிராமத்தினரும் குரங்குகள் கிடைக்காததால் குரங்கு வர்த்தகத்தை நிறுத்தி வைத்தனர்.

கனிசமான குரங்குகள் இருப்பில் இருந்தாலும் கிராமங்களில் குரங்குகளுக்கான தேவை மிதமிஞ்சி அதிகரித்ததால் ஆயிரம் குரங்குகளுக்கு இருபது டாலர் கொடுக்கப்படும் என்று அறிவித்தான்.ஆஹா! இருமடங்கு விலையா என்று கிராமத்தினரும் வாய்பிளந்து அக்கம்பக்கக் காடுகளுக்குச் சென்று குரங்குகளைப் பிடித்து விற்றனர். எல்லா கிராமத்திலும் இதே நிலை ஏற்பட்டதால் மீண்டும் குரங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, குரங்கு வர்த்தகம் டல்லடித்து!

அடுத்ததாக, ஆயிரம் குரங்குகளுக்கு 25 US$ என்று விலை நிர்ணயித்தான். மீண்டும் குரங்கு வேட்டை சூடுபிடித்தாலும் ஒரு குரங்குகூட கிடைக்கவில்லை.கிராமவாசிகளும் அமெரிக்கடாலருக்குக் குரங்கு விற்பதைக் கைவிட்டு அவரவர் பிழைப்பை பார்க்கத் தொடங்கினர்.

உலகம் முழுதும் குரங்குகளுக்கான தேவை அதிகரித்ததால், ஆயிரம் குரங்குக்கு 50US$ என்ற புதிய அறிவிப்புச் செய்யப்பட்டது. இதர்கிடையில் குரங்குக் கொள்முதல் செய்பவனுக்குச் சில தவிர்க்க முடியாத வேலைகள் இருந்ததால் தனது சார்பில் குரங்குகளை வாங்க ஒரு உதவியாளரையும் நியமித்து வேறுவேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.

இதைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்த உதவியாளன்,கிராமத்துக் குரங்கு வியாபாரிகளிடம் தன் முதலாளி ஏற்கனவே வாங்கி, தனீடம் விட்டுச் சென்றுள்ள குரங்குகளை ஆயிரம் குரங்குகள் 35US$ என்ற விலைக்கு, குரங்குகள் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்தினரிடமே மீண்டும் விற்க முன்வந்தான். தனது முதலாளி சிலநாட்கள் கழித்து மீண்டும் வந்த பிறகு பழையபடி ஆயிரம் குரங்குகளுக்கு 50 US$ வீதம் விற்கலாம் என்று ஆசை காட்டினான்.

தங்களிடமிருந்த சேமிப்புகளை எல்லாம் விற்று அமெரிக்க டாலராக்கி 1000 குரங்குகளுக்கு 35 US$ வீதம் உதவியாளரிடம் கிராமவாசிகள் வாங்கத் தொடங்கினர். பழையபடி அமெரிக்கன் குரங்குகள் வாங்க மீண்டும் வருவார், தங்களிடமிருக்கும் குரங்குகளை நல்லவிலைக்கு விற்கலாமென்று எதிர் பார்த்து எல்லாக் கிராமவாசிகளும் காத்திருந்தனர். ஆனால் குரங்கு வாங்குபவரோ அல்லது அவரது உதவியாளரோ வரவே இல்லை. திடீரென்று ஒருநாள் குரங்கு வாங்க/விற்க பணமில்லை என்பதால் உதவியாளர் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எல்லோரிடமும் அளவுக்கு அதிகமான குரங்குகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.

குரங்கு வர்த்தகம் சந்தை நிலவர அபாயங்களுக்கு உட்பட்டது என்று மெதுவாகச் சொல்லியபோதும் கிராமவாசிகள் துணிந்து குரங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அமெரிக்க டாலருக்கு குரங்கு வாங்க ஆளில்லாதக் காரணத்தால் சிலர் யூரோவுக்கு விற்கத் தொடங்கியுள்ளார்கள். எனவே, இனிமேல் யாரும் தயவு செய்து அமெரிக்க டாலருக்குக் குரங்கு வாங்க/விற்க கனவிலும் நினைக்காதீர்கள்!


ஷேக் அப்துல் காதர்

No comments: