சென்னை, பிப்.6: ‘‘மருத்துவம், கால்நடை, பொறியியல் மற்றும் விவசாய கல்லூரிகள் 9ம் தேதி மீண்டும் திறக்கப்படும்’’ என்று அரசு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழகத்தில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். இதனால் தமிழக கல்லூரிகளில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ‘தமிழகத்தில் உள்ள எல்லா அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது. விடுதிகளை காலி செய்யவும் கடந்த 31ம் தேதி உத்தரவிட்டது.
தொழிற்படிப்புக்கான கல்லூரிகள் 9ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அரசு நேற்று அறிவித்தது.
இதுகுறித்து தலைமை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இப்போது விடுமுறையில் உள்ள மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், விவசாய கல்லூரிகள், 9ம் தேதி முதல் செயல்படும். மற்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment