அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 3, 2009

பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்

பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் .
thillai-copy

பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால் தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ வயிறெரிந்து சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ வெற்றிநடைப்போட்டு கோயிலுக்கு வருகிறார்.கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால் தீட்சிதர்களோ வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.


புதியதாய் இதை படிக்கும் பலருக்கும் அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு 2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,

முதலில் மனித உரிமை பாதுகாப்புமையம் உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள் தான் இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,

பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக வழக்கு நடைப்பெற்றது,அதற்கு திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”


ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள் எத்தனை துரோகிகள் துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது, அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது . அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்

ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..

No comments: