இஸ்ரேல் vs காஸா ஸ்ட்ரிப் & இந்தியா vs பாக்கிஸ்தான்
இன்று மட்டுமல்ல, என்றுமே இஸ்ரேல் போரில் இல்லாமல் இருக்கிற நாட்கள் மிகவும் குறைவு. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கிறது. இவர்கள் சண்டைபோடும்போது, இஸ்ரேலின் வீரபிரதாபங்களைத்தான் அமெரிக்க ஊடகங்கள் பேசுவதுண்டு. அதாவது இந்த சண்டை நியாயமானது என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.அதே நேரத்தில், இந்தியா-பாக்கிஸ்தான் சண்டை என்று வந்துவிட்டால், அமெரிக்கா அதில் உள்ள நியாயத்தைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. ஏதோ தேவையே இல்லாமல் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்வது போலவும், இரண்டு நாடுகள் மேலேயும் தவறுபோலவும், இரண்டு நாடுகளும் அணுகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் அழிக்கப்போவது போலவும் அமெரிக்கா ஊடகங்களும், அரசாங்கமும் மக்களும் பேசுகிறார்கள்.
எனக்கு உண்மையிலேயே புரியவில்லை! அமெரிக்கர்கள் பேசும் நியாயமும் வியாக்யாணங்களும். இவர்கள் கவலை நியாயமானதா? அப்படியென்றால் இஸ்ரேலால் அணுகுண்டு, இந்தியாவைப்போல் உருவாக்க முடியாதா? இல்லை இஸ்ரேல் எது செய்தாலும் சரியா? இதுதான் அமெரிக்காவின் (அ)நியாயமா?
No comments:
Post a Comment