இஸ்ரேல் மீது எறிபடைத் தாக்குதல்
- லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் குறைந்தது மூன்று எறிபடைகள் பாய்ச்சப்பட்டுள்ளன. இதனால் காஸ„வில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விரிவடையுமென அஞ்சப்படுகிறது.
எறிபடைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் பீரங்கிப் படையுடன் தாக்குதல் நடத்தியது.
எறிபடைகளைப் பாய்ச்சியது யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவும் இல்லை.
புதன்கிழமை இரவு ஹமாஸ் படையினர் பயன்படுத்தும் வசதிகளைக் குறி வைத்து, காஸ„வில் இஸ்ரேல் 60 ஆகாயத் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து லெபனானில் இருந்து எறிபடைத் தாக்குதல் நடந்தது. தற்போதைய சண்டையில் இது மிகவும் ஆபத்தான தருணம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
காஸ„வில் நடைபெறும் சண்டை வட இஸ்ரேலுக்கும் லெபனான் எல்லைப் பகுதிக்கும் விரிவடையும் என்று அஞ்சப்படுவதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் ஜெருசல செய்தியாளர் மைக் சார்ஜன்ட் கூறினார்.
தென் லெபனானில் இருந்து வட இஸ்ரேலுக்குள் குறைந்தது மூன்று கட்யுஷா எறிபடைகள் பாய்ச்சப் பட்டது என்றும் சில செய்தி அறிக்கைகள் ஐந்து எறிபடைகள் பாய்ச்சப்பட்டதாகவும் கூறுகின்றன.
எறிபடைகளில் ஒன்று ஹைஃபா நகரின் வடக்கே உள்ள நஹாரியா வட்டாரத்தைத் தாக்கியதில் இருவர் லேசாகக் காயம் அடைந்ததாகவும் வேறு பலர் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இஸ்ரேலுடன் புதிய சண்டை தொடங்கும் சாத்தியம் பற்றி ஹமாஸின் ஆதரவாளரான ஹிஸ்புல்லா படைத் தலைவர் வெளிப்படையாகப் பேசிய மறுநாள் தாக்குதல் நடந்துள்ளது. லெபனான்-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஹிஸ்புல்லா படையினர் தயார்நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தை நடத்த எகிப்து முயற்சி
இதற்கிடையே இஸ்ரேல், பாலஸ்தீனம், ஹமாஸ் ஆகிய முத்தரப்புகளின் பிரதிநிதிகளுடன் கெய்ரோவில் தனித்தனியே பேச்சு நடத்த எகிப்து திட்டமிடுவதாக எகிப்தின் உயர் பேராளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
காஸ„வில் நிலவும் இஸ்ரேலிய-ஹமாஸ் மோதல் குறித்து பேச்சு நடத்த “அனைத்து தரப்புகளின் பிரதிநிதிகளும்” கெய்ரோவுக்குச் செல்ல திட்டமிடுவதாக எகிப்தின் ஐநா தூதர் மகத் அப்துல் அஜீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஸ„வில் நடக்கும் சண்டையை நிறுத்த எகிப்தும் பிரான்சும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி பற்றி எகிப்திய அதிகாரிகளுடன் பிரதிநிதிகள் கலந்து பேசுவார்கள் என்றார் அவர்.
ஆனால், முத்தரப்பின் பிரதிநிதிகளும் ஒரே அறையில் பேச்சு நடத்துவார்கள் என்று அர்த்தமில்லை என்றார் அவர்.
இத்திட்டத்தின் விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் காஸ„வுக்கு மனிதாபிமான உதவியை அனுப்ப அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சண்டை நிறுத்தம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய ராணுவப் படையான ஹமாஸŸக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக எகிப்தின் வெளியுறவு அமைச்சர் அகமது அபூல் கெத் உறுதிப்படுத்தினார்.
ஆனால் “அவர்கள் வந்தால் அவர்களது பிரதிநிதிகள் இஸ்ரேலின் பிரதிநிதிகளை ஒரே அறையில் சந்திக்க மாட்டார்கள்” என்றார் அவர்.
“இஸ்ரேலியக் குழுவினர் கெய்ரோவுக்கு வருவார்கள். அதற்கு மேல் எதுவும் கூற முடியாது,” என்று திரு கெத் கூறினார்.
ஆனால் ஹமாஸ் குழுவினர் எப்போது வருவார்கள் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் “எகிப்தியர்களுக்கும் இஸ்ரேலியர் களுக்கும் இடையில் சந்திப்பு நடக்கும், இஸ்ரேலியர்களுக்கும் ஹமாஸŸக்கும் இடையில் அல்ல” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இஸ்ரேலும் மிதவாத பாலஸ்தீன ஆட்சியும் சண்டை நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதாகப் பிரெஞ்சு அதிபர் நிக்கலஸ் சர்கோசி தெரிவித்தார். ஆனால் ஹமாஸின் எதிரியான பாலஸ்தீன ஆட்சிக்குத் தற்போதைய சண்டையில் நேரடி சம்பந்தம் இல்லை.
“அனைத்து தரப்புகளின் பேராளர்களும் எகிப்துக்கு வருகிறார்கள். சிலர் இன்றும் வேறு சிலர் நாளையும் வருகிறார்கள். எதையும் தொடங்குவதற்கு ஆக்ககரமான செயலில் இறங்கவேண்டும். சண்டை நிறுத்தமே ஆக்ககரமான செயல்” என்றார் திரு அப்துல் அஜீஸ்.
ஐநா பாதுகாப்பு மன்றம் அரபு நாடுகள் விரும்பும் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை ஏற்குமா அல்லது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை பரிந்துரைத்து பாதுகாப்பு மன்றத் தலைவர் வெளியிட்ட அறிக்கையை ஏற்குமா என்பதைப் பேச்சு வார்த்தை நிர்ணயிக்கும் என்றார் அவர். -
No comments:
Post a Comment