அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 9, 2009

திருட்டு இ-மெயில் கவனம

திருட்டு இ-மெயில் கவனம்


இப்போதெல்லாம் இமெயில் மோசடிகள் அதிகரித்தபடி உள்ளன.லாட்டரியில் ரூ.1 டீகாடி பரிசு விழுந்து இருக்கிறது... அதை பெற ரூ.50000 அனுப்புங்கள் என்பது ஆபால பல மோசடி இமெயில் வருவது உண்டு.
அதை நம்பி பணம் அனுப்புவோர் தலையில் துண்டை போட்டுக் கொள்ள வேண்டியதுதான். அந்த மாதிரியான இ மெயில்களை அடையாளம் காண்பது எளிது.
அது தவிர இப்போது புது மாதிரியான மோசடி பரவிக்கொண்டு இருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த சமிக்ஷா சர்மாவுக்கு அவரது நண்பர் வருண் முகவரியில் இருந்து இமெயில் வந்தது.
தான் லண்டனில் பர்சை தொலைத்து மாட்டிக் கொண்டதாகவும் உடனடியாக ரூ.85000 தேவைப்படுவதாகவும் அதை இந்த மெயிலில் தரப்பட்டுள்ள உள்ளுர் முகவரியில் கொடுத்து விடுமாறும் இருந்தது.
உடனே உஷாரான சமிக்ஷா வருணுக்கு போன் செய்தார்.அப்போது வருண் மும்பையில்தான் இருக்கிறார் எனவும்
தெரிய வந்தது.
ஆகவே வருணுக்கு சொந்தமான இமெயில் முகவரியை எப்படியோ கைப்பற்றி யாரோ மெயில் அனுப்பியது தெரியவந்தது.
இதுமாதிரி அடுத்தவர் இமெயில் முகவியை மோசடியாக கைப்பற்றி அதன் மூலம் மற்றவர்களுக்கு இமெயில் அனுப்புவது அதிகரித்துள்ளது.
பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அல் நாசிர் ஜக்கிரியா என்ற வர்த்தகருக்கு ஒரு இமெயில் வந்தது.அதில் அவரது உதவியாளர் ரூ.127 லட்சம் தருமாறு கேட்டிருந்தார்..தான் வெளிநாட்டில் மாட்டிக்கொண்டிருப்பதாக குருப்பிட்டு இருந்தார் அதுவும் உண்மையல்ல.
ஆகவே நாம் இது போன்ற இமெயில் திருடர்களிடம் சிக்கிவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.

No comments: