மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரேயின் படுகொலைக்குப் பிறகு மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என நாட்டு மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். அவர்களது கவலையை நிஜமாக்கும் விதத்தில் ஒரு விரும்பத் தகாத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் புரோஹித்துக்கு நெருக்கமானவராக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திடுக்கிடும் தகவல்களை மேற்கொள்காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பகுதியை வகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு (மாலேகான் குண்டு வெடிப்பு தீவிரவாதி) வர வேண்டும் என கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி, ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கர்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு வகித்தார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷி தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் கையாண்ட அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டடாளி என்பதும் தீவிரவாதி புரோஹிதின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
மகராஷ்ட்ர அரசு உடனடியாக தீவிர வாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக செயல்படும் தீவிரவாதிகளின் நண்பரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment