அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, May 19, 2009

எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி சம்மதம்



புது தில்லி, மே 18: புதிய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் நீடிக்கவும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இதை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், திங்கள்கிழமை தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரான எல்.கே. அத்வானி, புதிய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக இல்லை என்றும், வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் அதிரடியாக அறிவித்தார்.

அத்வானியின் இந்த முடிவு பாரதிய ஜனதாவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அத்வானியை சமாதானம் செய்து அவரது முடிவை மாற்ற வேண்டிய பொறுப்பை கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங்.

அத்வானிக்கு அன்பு வேண்டுகோள்  

பாரதிய ஜனதாவுக்கு மூத்த தலைவரான அத்வானியின் தலைமை மிக மிக அவசியம் என்றும், அவரது சீரிய வழிகாட்டுதலின் பேரில்தான் கட்சியை பின்னடைவில் இருந்து தூக்கி நிறுத்த முடியும் என்றும் பாரதிய ஜனதாவின் பிற தலைவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த அன்பு வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க அத்வானி சம்மதம் தெரிவித்தார் என்றும் 

No comments: