அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, May 20, 2009

வெளிநாட்டவர்களுக்கான பிணை ஒப்பந்தம் (ஸ்பான்ஸர்ஷிப்) பஹ்ரைனில் முடிவுக்கு வந்தது

பஹ்ரைன்: இது நாள் வரை அமலில் இருந்து வந்த ஸ்பான்ஸர்ஷிப் திட்டம் பஹ்ரைனில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா போன்ற வெளி நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டுமெனில் அந்நாட்டு குடிமகன் (சிட்டிஸன்) ஒருவர் அதற்குச் சம்மதித்து பிணை ஒப்பந்தம் (ஸ்பான்ஸர்ஷிப்) செய்ய வேண்டும்.

மேலும், அக்குடிமகனே வெளிநாட்டுப் பணியாளரின் எஜமானனாக இருப்பார். வெளிநாட்டிற்கு வேலை செய்ய வருபவர் தன் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டுமென்றாலும், பணி செய்யும் நாட்டில் உள்ள வேறு நிறுவனத்திற்குப் புலம் பெயர வேண்டுமென்றாலும் இந்த ஸ்பான்ஸரின் அனுமதி ஒப்புதல் இன்றி எதுவும் நடக்காது. இது வளைகுடா நாடுகளில் பரவலாக இது நாள் வரை நடைமுறையில் இருந்து வரும் ஒரு திட்டமாகும்.

இது அடிமைத்தனம் என்றும், இத்தகைய பிணை ஒப்பந்தத்திலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்றும் பணிக்காக வரும் வெளிநாட்டவர் பல வருடங்களாக வேண்டுகோள் எழுப்பி வருகின்றனர்.

தற்போது இதனை ஏற்றுக்கொண்ட பஹ்ரைன் அரசு எதிர் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டவருக்கான பணி ஒப்பந்தங்களை அரசே முன்னின்று ஒழுங்குபடுத்தும் என்றும் அறிவித்துள்ளது.

இச்செய்தி பஹ்ரைன் வாழ் வெளிநாட்டவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் உண்டாக்கியுள்ளது. இத்திட்டம் அடுத்தடுத்த வளைகுடா நாடுகளிலும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று 

No comments: