அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு

மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு


ஈரோடு, ஜன.16-

மாட்டுப் பொங்கல் கொண்டாட மொபட்டில் சென்ற விவசாயி மீது பஸ் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக செத்தார். உடன் சென்ற உறவுக்கார பெண் படுகாயம் அடைந்தார்.

மாட்டுப்பொங்கல்

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நேற்று காலை மாட்டுப்பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கமணியின் சகோதரியான சின்னப்பாப்பாள் என்கிற பாப்பாத்தியை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு-கோபி மெயின் ரோட்டில் உள்ள தயிர்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக பண்ணாரி செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. தயிர்பாளையம் பிரிவு அருகே உள்ள திருப்பம் பக்கம் வந்த போது மொபட் மீது பஸ் மோதியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிச்சாமி தலை, மார்பில் பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார். பாப்பாத்திக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பஸ் டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த பாப்பாத்தியை, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பழனிச் சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணை

பழியான பழனிச்சாமிக்கு மாதேஸ், கோவிந்தராசு என்ற 2 மகன்களும், அச்சுதா என்ற ஒரு மகளும் உள்ளனர். விபத்து குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பயஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: