அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது


சென்னை, ஜன.16-

மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. அரசு தடையை மீறி சென்னையில் நேற்று திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடைகளுக்கு விடுமுÛ
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மதுபாட்டில்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அரசு தடையை மீறி, திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி சென்னை நகர் முழுவதும் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் மது பாட்டில்களை பார்களில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் சில இடங்களில் சோதனை நடத்தினார்கள். சென்னை கோட்டை அருகே வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் விசாரணை நடத்தினார்.

மது பாட்டில்கள் கடத்தல்

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 150 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை கடத்தியதாக குணசீலன், கோபால், பழனி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பியத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த சத்தியராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல, பேசின்பிரிட்ஜில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்ற முனியம்மாள் என்ற பெண் பிடிபட்டார். திருவான்மிïரில் 90 மதுபாட்டில்களுடன் ராமசாமி என்பவர் கைதானார். நேற்று இரவு வரை போலீசார் சோதனை வேட்டை நடத்தினார்கள்.

No comments: