(தொட(ர்)ரும் கதை:(இஸ்மாயில் நானா வந்து போய் ஒரு மாதம் போனில் பேசி கொண்டது மட்டுமே நேரில் சந்தித்து கொள்ள உடியாத வகையில் ஜமாலும் ,கபூரும் அவர் அவர் வேலைகளில் மூழ்கிவிட்டார்கள்.திடீரென நானாவின் வீட்டுகாரவொ வந்திருப்பதாக தகவல் கேட்டு,மாமி வீட்டுக்கு வருகிறா சரிபா. இனி....)வாங்க மாமி சவுக்கியமா இருக்கிறீயலா?- சரிபா. நா நல்ல இருக்கேன் நீங்கள்லாம் சவுகியமா இருகியலா? நாங்க வரனும்னு தான் பாத்தோம் எங்க அவஹளுக்கு வேல அப்படி நீங்க யாரச்சம் வந்திருக்கலாம்.இவஹ எப்பவுமே சொல்லிகிட்டுத்தான் இருப்பாக.என்ன செய்யிறது இங்கயும் பல வேல இவங்களையும் நா இப்ப முன்னே மாரி வேலக்கு அனுப்பறதில்ல என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ரெஸ்ட் இருந்தா தான் பலய தாக்கத்து உடம்புக்கு வரும் இருந்தாலும் எங்க சொல்லு கேக்குறாக சில நேரம் நம்ம கண்ண அசர்ர நேரம் அப்படியே வெலியில கிளம்பி போய்டுறாக.ஆப்பளைக்கு என்ன தெரியும்? நாம பொம்பளத்தான் கிடந்து அள்ளாடுறோம்- சரிபா சொன்னால் ஆதங்கத்துடன்.
ஆமாமா நீ சொல்றது சரிதான்.உடம்புக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா அப்பறமா அவதி,பவதியா போய்யிடும்.அதான் சும்ம போன்லேயே பேசிக்கிட்டு இருக்கம நேர்ல போய்ட்டுவான்னு நான சொல்லி அனுபிச்சாக.அதான் நஸ்ரின(தங்கை மகள்)கூட்டிகிட்டு ஓடியன்ந்தேன் ஸபுரா பீவி( நானாட மனைவி பெயர்)இருங்க சர்பத்து கலக்கிட்டு வரேன் சாப்புட்டுட்டு சாயங்காலம போகலாம்- செலயாமத்தா.அது சரி அதுவர நாங்க இருக்க முடியாது போட்டத போட்ட படி வந்திருக்கோம் இன்னொரு நாளைக்குப் பாக்கலாம்.அந்த கததான் வானா இருந்து சாப்பிட்டுவிட்டுதான் போகனும் நான் நானாக்கு போன் போடுறேன் ந்னு சொல்லிக்கிடே கபூர் வீட்டுக்குள் நுழைகிறான்.(தொடரும்)
No comments:
Post a Comment