அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

முகம் பார்க்கும் கண்ணாடி: தோப்பில் முகம்மது மீரான்

முகம் பார்க்கும் கண்ணாடி: தோப்பில் முகம்மது மீரான்




திருநெல்வேலி, ஜன. 4: தமிழகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக "சாளரம்' இருப்பதாக சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு தினசரி பத்திரிகையின் குடும்ப விழாவில் கலந்து கொண்டேன். அந்த விழாவில் ஏதாவது ஒரு தமிழ் தினசரி பத்திரிகைப் பற்றிப் பேசக் கூறினார்கள். தமிழில் பல தினசரி பத்திரிகைகள் வெளிவந்தாலும், எனக்கு அப்போது தினமணி மட்டும்தான் நினைவுக்கு வந்தது.

ஏனென்றால் தினமணி மட்டும்தான் தமிழில் தலையங்கத்தோடு வெளிவருகிறது. வேறு எந்தப் பத்திரிகையும் தலையங்கத்தோடு வெளிவந்ததாகத் தெரியவில்லை. இதை அங்கு கூறும்போது அங்குள்ளவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அப்படிப்பட்ட தினமணி பத்திரிகையில் இந்த 14 நேர்காணல்களின் மூலம் ஒரு தலைமுறையின் எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 14 நேர்காணல்களிலும் எனக்கு பழ. நெடுமாறன் மற்றும் கனிமொழியின் நேர்காணல்கள்தான் மிகவும் பிடித்திருந்தன.

நேர்காணல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாளரமே ஒரு சான்று.

இந்தப் புத்தகம் தலைமுறை, தலைமுறைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக சாளரம் இருக்கிறது. இந்த புத்தகம் ஆங்கிலம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார் தோப்பில் முகம்மது மீரான்.

No comments: