ஜித்தாவில் இஸ்லாமிய அமர்வு
ஜித்தா செனய்யா இஸ்லாமிக் செண்டரில் 01.01.2009 வியாழக்கிழமை மாலை இஸலாமிய அமர்வு நடைபெற்றது.
இஸ்லாமிய அமர்வுக்கு அமீன் தலைமை தாங்கினார். நற்குணம் எனும் தலைப்பில் ஸப்பீர் அஹ்மத் சிற்றுரை நிகழ்த்தினார்.
ஆஷுரா நோன்பின் மகிமை குறித்து மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹிம் மதனியும், சுயபரிசோதனை எனும் தலைப்பில் எம்.ஐ.ஸியாத் மக்கியும் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் தமிழக சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment