கோவில்பட்டி கல்லூரியில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்
"இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது''
கோவில்பட்டி, ஜன.16-
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர். அப்போது இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது என்று அந்த மாணவ- மாணவிகள் கூறினார்கள்.
கலந்துரையாடல்
இங்கிலாந்து லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கிறிஸ், சிமா, லியோனி, ஜாஸ்மிரித் மற்றும் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கதம்பராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்திய மற்றும் இங்கிலாந்து கலாசாரங்கள், திருமண முறைகள், கல்வி, அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
எங்களை கவர்ந்தது
இங்கிலாந்து மாணவிகள், இந்திய அனுபவம் மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், மக்கள் அனைவரும் நட்புடன் பழகுகிறார்கள் என்றும் கூறினர். மேலும் இந்திய நாட்டின் கலாசாரம் மற்றும் உடைகள் தங்களை மிகவும் கவர்ந்ததாக கூறினர்.
நிகழ்ச்சியில் சிடார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சையதுஅலி, கணேஷ்பிரபு, தேவராஜ், கல்லூரி விரிவுரையாளர்கள் சந்திரசேகர், பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment