அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

SANPARIVAR

பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது.

பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன.

இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன.

இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்).

இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தினருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி).

இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல.

ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது.

இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன்றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.

ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன.

உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது.

இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான்.

மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன:

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)

2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)

3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)

4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)

5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)


6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)

7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)

8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)

9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)

10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)

11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)

12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)

13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)

14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)

15. சிக்கா பாரதி (21 லட்சம்)

16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)

17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)

18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)

19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)

20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)

21. வனவாசி கல்யாண் ஆசிரம்

22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)

23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)

24. சங்கல்ப்

25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)

26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)

27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)

28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)

29. சேவா பாரதி

30 பாரதீய விசார் கேந்திர்

(இன்னும் ரகசியமாய் செயல் படும் அமைப்புக்கள் அனேகம்!!!)


சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரை யும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின் றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான்.

தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.

இன்ஷா அல்லாஹ் (தொடரும்...

No comments: