அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

சென்னை, ஜன.15:

24-ல் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

சென்னை, ஜன.15: மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஜனவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

நட்பின் செழிப்புக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் வள்ளுவர் காட்டும் நெறிமுறைகள்' (அல்லது) "பன்னாட்டு அரிமா சங்கங்களின் சமுதாய நலப்பணிகள்' எனும் தலைப்பில் மாணவர்கள் பேச வேண்டும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் மாலை 4 மணிக்கு போட்டி நடைபெறும். வெற்றிபெறும் 5 பேருக்கு அறிவுக்களஞ்சியம் விருதுகளும் பரிசும் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஜனவரி 22-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, மாங்கொல்லை, 4, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி: 044 - 2495 1415.

No comments: