அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

நாகர்கோவில், ஜன. 12:

சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்'


நாகர்கோவில், ஜன. 12: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்போர் வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு குளிரூட்டுதல் பயிற்சி, ஏர் கண்டிஷனிங், தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சி, ஆங்கிலம் பேசுதல், பெர்சானாலிட்டி டெவலப்மென்ட் உள்ளிட்ட பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன.

10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் அல்லது மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப் பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்:

பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:

சாதிச் சான்றிதழ், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருந்தால் அதற்குரிய நகல்களை இணைக்கலாம். வருமானச் சான்றிதழ் நகல், பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை வெள்ளைத் தாளில் எழுதி, எந்த பயிற்சியில் சேர்ந்து பயில வேண்டும் என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில்.

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள், உரிய தகுதிகள் இல்லாமல் இருந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை இம் மாதம் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments: