அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

மதுக்கடையை மாற்றக்கூடாது'

மதுக்கடையை மாற்றக்கூடாது'

கோபி, ஜன. 13: பவானி அருகே உள்ள அரசு மதுபான விற்பனை நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது என கிராம பொதுமக்கள் கோபி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்கள்.

கோபி அருகே பவானி தாலுகாவைச் சேர்ந்த ஜம்பை டவுன் பஞ்சாயத்து கோட்டை மேடு பகுதியில் உள்ள மதுக்கடையால் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் அப்பகுதியிலிருந்து கடையை மாற்றும்படி சிலர் சொல்லி வருகின்றனர்.

இதையறிந்த மற்றொரு பிரிவினர் மதுக்கடையை மாற்றக்கூடாது எனக்கோரி கோபி கோட்டாட்சியர் மகேஸ்வரனிடம் அளித்த மனு: ஜம்பை டவுன் பஞ்சாயத்தில் 50 சதவிகிதம் பேர் தினக்கூலிகளாக உள்ளனர். நாள் முழுக்க உடல் உழைப்பை செய்துவரும் எங்களுக்கு மதுபான கடை அவசியம் தேவை. இந்த கடையை ஏதோ சில பிரச்னையை மையமாக வைத்து இடமாற்றம் செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் இந்தப் பகுதியில் டாஸ்மாக் வந்தபிறகுதான் கள்ளச்சாராயம் ஒழிந்தது. இந்த கடையை அகற்றினால் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானி அல்லது 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆப்பக்கூடல் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். எனவே கடையை மாற்ற எடுக்கப்படும் முயற்சியை கைவிட வேண்டும்.

No comments: