அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை, ஜன. 13: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மெட்ரிக்குலேஷேன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த விவரம்: மத்திய அரசு அமைத்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி ஒரிசா, கோவா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளனர். அண்மையில் கேரளத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரத்து செய்யும்போது கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள்.

மாணவர்கள் பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெற முடியும். அரசுக்கும் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

பத்தாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவர்களில் ஒரு சிலரே மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெறுகின்றனர். பல மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடருவதில்லை.

ஆனால் பள்ளிகளில் ஒரு பொதுத் தேர்வு மட்டும் வைக்கும்போது தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

மேலும் அரசாங்க மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தல் விலக்கு அளிக்கப்பட்டதைப் போல மெட்ரிக்குலேஷன் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.

No comments: