அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

தலைமைச் செயலகத்தில் லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது

தலைமைச் செயலகத்தில் லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது

சென்னை, ஜன. 13: தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் ஒருவரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது உள்துறை சார்புச் செயலர் சதக்கத்துல்லாவை லஞ்சஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அரசு உயர் அதிகாரி ஒருவர் தலைமைச் செயலக வளாகத்திலேயே லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டது தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் உள்துறையில் சார்புச் செயலராக இருப்பவர் சதக்கத்துல்லா. கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற இளநிலை உதவியாளர் ஒருவரிடம் பணி வரன்முறைப்படுத்துவது தொடர்பாக லஞ்சம் கேட்டராம்.

இது குறித்து அந்த இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் உள்துறை சார்பு செயலர் சதக்கத்துல்லாவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. வல்சராஜன் தலைமையிலான போலீஸôர் ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

புகார்தாரர் தெரிவித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் அவரிடம் இருந்து தலைமைச் செயலக வளாகத்தில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது சதக்கதுல்லாவைப் போலீஸôர் கையும்களவுமாகப் பிடித்தனர்.

தலைமைச் செயலக வளாகத்திலேயே அவரிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் விசாரணை நடத்தினர். அவரது அலுவலக அறையும் சோதனையிடப்பட்டது. அவர் ஏற்கெனவே பலரிடமும் லஞ்சம் வாங்கியிருப்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.

இதையடுத்து சதக்கத்துல்லாவின் வீட்டிலும் போலீஸôர் சோதனை நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.

முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்கள் தினமும் வந்து செல்லும் தலைமைச் செயலக வளாகத்தில், உயர் அதிகாரி ஒருவர், அரசு ஊழியர் ஒருவரிடமே லஞ்சம் வாங்கும்போது கைதாகியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகு...: 1994-ம் ஆண்டு அரசு ஊழியர் ஒருவரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கியதாக உள்துறைப் பிரிவு அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தனது வீட்டில் பூஜை அறையில் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டாராம்.

இதனையடுத்து, 15 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்புச் செயலர்கள்...: ஏற்கெனவே, தலைமைச் செயலக ஊழியர்கள் வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்புச் செயலர் ஆர். கோபால், கைத்தறி மற்றும் கதர்துறை சார்புச் செயலர் ஜி. தேவதாஸ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உதவிப் பிரிவு அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் கடந்த ஜூன் 28-ம் தேதி தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அப்போது எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏடிஜிபி ராமானுஜம் உத்தரவின் பேரில் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸôர் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே உள்துறைச் சார்பு செயலர் சதக்கத்துல்லா கைது நடவடிக்கை அமைந்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிக அளவில் லஞ்சப் புகாருக்கு உள்ளாகும் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்கைகள் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

No comments: