ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து நாளொரு தகவலும் பொழுதொரு மர்மங்களும் அம்பலமாகி வரும் நிலையில் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஆத்திரமும் சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது.
சமூக நல்லிணக் கத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் அனைத்தும் சங்கும்பல் சதி காரர்களைக் கண்டித்து தங்கள் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் விசாரணை வளையத்தில் வைக்கப் பட்டுள்ள சங் பயங்கர வாதிகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் மக்களின் வெறுப்பு திரும்பி யுள்ளது.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியினரை தீவிரவாதக் கூட்டம் என்றும் அக்கட்சியின் பிரதமர் வேட் பாளர் எல்.கே. அத்வானி மிகப்பெரிய தீவிரவாதி என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் போட்டு உடைத்திருக்கிறார்.
பாஜக தீவிரவாதக் கூட்டம் என்றும் அது நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவும் கூறிய சமூக நீதித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்தத் தீவிரவாதிகள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலைகள் தான் என்றும் வெளுத்து வாங்கியுள்ளனர்.
அகில இந்திய தொலைக்காட்சி சானல்களில் மாலேகான் விவகாரம் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம் பாஜக வகையாறக்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவரும் நிலையில் ரயில்வேத் துறை அமைச்சர் லாலுவின் அதிரடி அறிவிப்பு சங் முகாமில் அலறலை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment