அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

தேசியக் கொடியை முறைகேடாக விற்ற 2 அதிகாரிகள் சஸ்பெண்ட

தேசியக் கொடியை முறைகேடாக விற்ற 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பரத்பூர், ஜன. 12: ராஜஸ்தானில் தேசியக் கொடியை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரு அதிகாரிகள் சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இங்குள்ள பழைய பொருள்கள் விற்பனை செய்யும் ஏல விற்பனை மையத்தின் மூலம் தேசியக் கொடியை இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பரத்பூர் வேளாண் பொருள் விற்பனை வாரிய நிர்வாகப் பொறியாளர் தேவேந்திர பால் சிங், ஸ்டோர் கீப்பர் தாவு தயாள் பன்சல் ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

No comments: