அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

குடும்ப கட்டுப்பாடு செய்தால் நானோ பரிசு : ராஜஸ்தானில் ருசிகரம்!!

ஜெய்ப்பூர்: குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு அரிசி, பணம் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ராஜஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்ட சுகாதார துறை, குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்பவர்களுக்கு நானோ கார் உள்பட பல பம்பர் பரிசுகளை அறிவித்துள்ளது.

ராஜஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவடத்தில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து எகிறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

எகிடுதகிடாக அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார துறை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை மாவட்ட சுகாதார துறை காட்டுகத்தலாக கத்தியும் யாரும் காதில் வாங்கி கொள்ளவில்லை.

அவரவர் தங்களது வேலைகளில் மட்டும் கண்ணும்கருத்துமாக இருந்தனர். இதனால், செய்வதறியாது திகைத்த அந்த மாவட்ட சுகாதார துறை,குடும்ப கட்டுப்பாடு செய்பவதை ஊக்கப்படுத்த பல பம்பர் பரிசுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்பவர்களுக்கு பிரத்யேக கூப்பன் கொடுக்கப்படுகிறது. பின்னர் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பர் பரிசாக நானோ கார் உள்பட 5 மோட்டார்சைக்கிள்கள், 5 கலர் டிவிக்கள், 7 மிக்சிக்கள் ஆகியவை பரிசுகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன குடும்ப கட்டுப்பாடு அறிவிப்பு அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: