வாடகை வீடுகளுக்கு "கிராக்கி' குறைந்தது!
வாடகை வீடுகளுக்கு "கிராக்கி' குறைந்தது!
சென்னை, ஜன. 13: உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சென்னையில் ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக வாடகையுள்ள வீடுகளுக்கு குடிவர பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வீட்டுத் தரகர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ரூ. 2,500-க்கும் அதிகமாக வாடகை வசூலிக்கும் மேன்ஷன்களும் தற்போது வெறிச்சோடியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் ஏறியது.
ஒரு படுக்கையறை, ஹால், சமையலறை கொண்ட வீட்டிற்கு வாடகை ரூ. 7 ஆயிரம் வரையும், இரு படுக்கையறை கொண்ட வீடு ரூ. 10 ஆயிரம் வரையும் வாடகைக்கு விடப்பட்டன.
இருசக்கர வாகன நிறுத்துமிடம்கூட இல்லாத ஒண்டிக் குடித்தனங்களிலும் ஒரு குடியிருப்புக்கு ரூ. 4,500 வரை வாடகை வசூலிக்கப்பட்டது.
இதற்கு ஒட்டுமொத்தமாக தெரிவிக்கப்பட்ட காரணம் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிதான். உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் பெறுவதே தற்போது பெரும்பாடாக உள்ளது என்று சாப்ட்வேர் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்களில் சிக்கன நடவடிக்கையாக சம்பள வெட்டும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பெரும்பாலானோர் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வாடகையுள்ள வீடுகளை மட்டுமே விசாரிக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்வோர் வீடுகளை விசாரிப்பது பெருமளவில் குறைந்துள்ளது என்று நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டு வாடகைத் தரகராக உள்ள சதீஷ் தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 வரை வாடகையுள்ள வீடுகளுக்கு 20, 30 பேர் விசாரிப்பார்கள். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஓரிருவர் மட்டுமே தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் வாடகை வீடுகள் குறித்து விசாரிப்பதாக ராயப்பேட்டையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் குமார் தெரிவித்தார்.
இவர் பகுதி நேரமாக வீட்டு வாடகைத் தரகர் வேலை பார்க்கிறார்.
ஆனால், திடீரென உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை மட்டும் இதுவரை குறைக்கப்படவில்லை.
மேன்ஷன்கள் வெறிச்சோடின: சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் இருவர் தங்கும் அறையில் டி.வி. உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய அறைக்கு மாத வாடகையாக ரூ. 3,500 வரை வசூலிக்கப்பட்டது.
இந்த அறைகளுக்கு பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களே வாடகைக்கு வந்தனர்.
""எங்கள் மேன்ஷனில் ரூ. 3 ஆயிரம் மாத வாடகையில் 10 அறைகள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்கள் வரை ஏறத்தாழ அனைத்து அறைகளும் நிரம்பியிருந்தன. ஆனால், நவம்பர் மாதம் முதல் ஒருவர் கூட இந்த அறைகளில் தங்கவில்லை. எனவே, வாடகையை ரூ. 500 குறைத்தோம். தற்போது 20 பேர் வரை தங்கும் அறைகளில் நான்கு பேர் தங்கியுள்ளனர்'' என்று திருவல்லிக்கேணி சைடோஜி தெருவில் உள்ள மேன்ஷன் மேலாளர் எம்.ஆர். பத்மராஜன் கூறினார்.
அதேபோல், கடந்த இரண்டு மாதங்களில் திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் அதிக இடங்கள் காலியாக உள்ளதாகவும் மேன்ஷன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment